ஸ்டார்
பக்ஸ், மெக் டொனால்ட்ஸ் போன்ற பல செயின் உணவகங்கள் மற்றும் காபி கடைகளை நாம்
அறிவோம். அவை எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகள்.
இந்தியாவில்
அப்படி ஒரு கலாச்சாரத்தைக் கொண்டு வந்த கம்பெனி என்றால் அது வி ஜி
சித்தார்த்தாவின் Cafe Coffee Day கம்பெனி தான்.
ஒரு
காலம் வரை கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த Cafe Coffee Day கம்பெனிக்கு கடந்த சில
வருடங்களாகவே நேரம் சரி இல்லை. சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து கொண்டே
இருக்கின்றன.
தலைவர் மரணம்
1996-ம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட
Cafe Coffee Day கடை பிரமாதமாக கல்லா கட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காபி டே
கடைகளை நிறையத் திறந்தார்கள். கூடவே கடனும் அதிகரித்தது. கடந்த 2019-ம் ஆண்டு தான்
Cafe Coffee Day நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி ஜி சித்தார்த்தா மரணமடைந்தார்.
அதோடு ஏகப்பட்ட கடனும் பாக்கி இருக்கிறது.
கடைகள் மூடல்
இப்போது, 2020 - 21 நிதி ஆண்டின்
முதல் காலாண்டான ஜூன் 2020-ல், 280 அவுட் லெட்களை மூடி இருப்பதாக Cafe Coffee Day
கம்பெனியே சொல்லி இருக்கிறது. எனவே Cafe Coffee Day கம்பெனி கடைகளின் எண்ணிக்கை,
30 ஜூன் 2020 முடிவில் 1,480 ஆக குறைந்து இருக்கிறது.
என்ன காரணம்
Cafe Coffee Day கம்பெனி காபி டே
எண்டர்பிரைசஸ் என்கிற கம்பெனியின் துணை நிறுவனம் தான். இந்த ஏப்ரல் 2020 - ஜூன்
2020 காலாண்டில் ஒரு நாளுக்கு சராசரியாக விற்பனை 15,445 ஆக குறைந்து இருக்கிறதாம்.
இதற்கு முந்தைய நிதி ஆண்டில் முதல் காலாண்டில் 15,739 ஆக இருந்ததாம். பெரிதாக
லாபம் இல்லாததால் தான் இந்த 280 கடைகளை பூட்டி இருக்கிறார்களாம்.
இயந்திரம்
காபி கடைகளில் வியாபாரம்
குறைந்தாலும், வெண்டிங் இயந்திரங்களின் (Vending Machine) எண்ணிக்கை, கடந்த நிதி ஆண்டின்
முதல் காலாண்டில் 49,397 ஆக இருந்தது. இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டில் 59,115
ஆக அதிகரித்து இருக்கிறதாம். அதோடு கம்பெனியின் ஏற்றுமதி வியாபாரத்தை தற்காலிகமாக
நிறுத்தி இருக்கிறார்களாம். காரணம் பெரிய அளவில் மார்ஜின் இல்லையாம்.
கடனை திருப்பிச் செலுத்தல்
சித்தார்தாவின் மரணத்துக்குப் பிறகு,
காபி டே எண்டர்பிரைசஸ் கம்பெனிக்கு இருக்கும் கடன்களை அடைக்க, காபி டேக்குச்
சொந்தமான, காபி வியாபாரத்தில் தொடர்பில்லாத சொத்துக்களை விற்று அடைத்துக் கொண்டு
இருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில், காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச்
சொந்தமான குளோபல் வில்லேஜ் டெக் பார்க்-ஐ ப்ளாக் ஸ்டோன் என்கிற கம்பெனிக்கும்,
சலர்புரியா சதாவா என்கிற கம்பெனிக்கு சுமாராக 2,700 கோடி ரூபாய்க்கு விற்பதாக
அறிவித்தார்கள்.
மார்ச் 2020
இந்த விற்பனை மூலம் கிடைக்கும்
பணத்தைக் கொண்டு, காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் கம்பெனி, கடன் கொடுத்த 13
பேருக்கும் சுமாராக 1,644 கோடி ரூபாயை திருப்பி கொடுப்பதாகச் சொன்னது இங்கு
குறிப்பிடத்தக்கது. அதோடு காபி டே எண்டர்பிரைசஸ் கம்பெனி வைத்திருந்த மைண்ட் ட்ரீ
பங்குகளை எல் & டி இன்ஃபோடெக் கம்பெனிக்கு விற்றதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக