Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜூலை, 2020

சபாஷ் இது நல்ல விஷயம் தான்.. ஏஜிஆர் நிலுவையில் ரூ.1000 கோடியினை செலுத்திய வோடபோன் ஐடியா..!


வோடபோனுக்கு பாதிப்பு அதிகம்
இந்தியாவில் கொரோனாவிற்கு முன்பே படு மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் இந்திய தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. நாட்டில் அந்த சமயத்தில் நிலவி வந்த கடுமையான மந்த நிலையால் பல துறைகள் வீழ்ச்சி கண்டன.
ஆனால் அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அதிகம் தொலைத் தொடர்பு துறையும், ஆட்டோமொபைல் துறையும் தான்.
ஆனால் இதில் இந்திய தொலைத் தொடர்பு துறையின் பிரச்சனையை மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாக, இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஏஜிஆர் வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. பல ஆயிரம் கோடிகள் பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்பளித்தது.
 வோடபோனுக்கு பாதிப்பு அதிகம்
இது மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் பிரச்சனை தான் என்றாலும்,. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது வோடபோன் நிறுவனம் தான். ஏனெனில் ஏற்கனவே கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வந்த வோடபோன் ஐடியா நிறுவனம், கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து பெரும் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருகின்றது.
பிரச்சனையில் வோடபோன் ஐடியா
ஒரு புறம் ஜியோவின் வருகையால், போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிறுவனம், மறுபுறம் வந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிலை குலைந்து போனது. அதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது கொரோனாவும் வந்துள்ளது. ஏற்கனவே பலத்த நிதி பிரச்சனையில் இருந்த வோடபோன் நிறுவனம், ஐடியா நிறுவனத்தினை வாங்கினால் தங்களால் மேற்கொண்டு சேவையினை விரிவுபடுத்த முடியும் என்று எண்ணியது. இதனால் இப்பிரச்சனைகளுக்கு முன்னாலே, இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன. ஆனால் இணைப்புக்கு பிறகும் நஷ்டம் அதிகரித்து வந்தது தான் மிச்சம்.
ஏஜிஆர் நிலுவை
இப்படி தொடர்ந்து பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வரும் வோடபோன் ஐடியாவுக்கு வேறு வழியில்லாமல் ஏஜிஆர் நிலுயை சிறுக சிறுக செலுத்த ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் தான் தற்போது தான் நிலுவையில் உள்ள ஏஜிஆர் தொகையில் ஜூலை 17 அன்று 1000 கோடி ரூபாயினை செலுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் 6,854 கோடி ரூபாயினை செலுத்திய நிலையில், தற்போது மொத்தம் 7,854 கோடி ரூபாயினை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வளவு செலுத்தியுள்ளது?
ஏற்கனவே இந்த நிறுவனம் அரசு ஏதும் நிவாரணம் வழங்காவிட்டால், நிறுவனத்திற்கு பெரிய பூட்டாக போட வேண்டியது தான் என்று வோடபோன் குழுமத்தின் தலைவர் குமார் மங்கல பிர்லா ஒரு அறிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். ஏனெனில் ஏஜிஆர் நிலுவையிலேயே அதிகம் பாக்கி வைத்திருந்தது வோடபோன் தான். எனினும் தற்போது போட்டியை சமாளிக்க முயற்சியை கைவிடாது சிறுக சிறுக நிலுவை செலுத்தி வருகிறது வோடபோன் ஐடியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக