சுஷாந்த்
சிங் தரக்கொலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து மக்கள் மத்தியில் பிரபலமான
நடிகை கங்கனா ரனாவத் பற்றி Republic TVயில் ஆங்கர் அர்ணாப் கோஸ்வாமி நேரலையில்
விவாதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை கஸ்தூரியை அவர் பேசவே
அனுமதிக்கவில்லை.
கஸ்தூரி எவ்வளவோ முயற்சித்தும் அவரது கருத்தை காதில் வாங்காத அர்னாப் தொடர்ந்து காட்டு கத்து கத்தி அவரது கருத்துக்களையே முன் வைத்துக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான கஸ்தூரி நிகழ்ச்சியின் நேரலையிலே மத்திய உணவு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
கஸ்தூரி எவ்வளவோ முயற்சித்தும் அவரது கருத்தை காதில் வாங்காத அர்னாப் தொடர்ந்து காட்டு கத்து கத்தி அவரது கருத்துக்களையே முன் வைத்துக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான கஸ்தூரி நிகழ்ச்சியின் நேரலையிலே மத்திய உணவு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி ட்விட்டரில் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கும் அங்கு நடந்தவற்றை குறித்தும் கமெண்ட் செய்துள்ள கஸ்ரதுரி "பொதுவாக அர்னாப் நடத்தும் விவாதத்தில் கிட்டத்தட்ட பாதி நேரத்திற்கும் மேலாக அவரே பேசுவார் , விருந்தாளிகளை பேச விடமாட்டார்.
"நான் அர்னாப்பை ஹைப்பர்மோடில் 60 நிமிடங்கள் பார்த்தேன், அவர் எப்படியும் என்னை பேச அனுமதிக்க மாட்டார், அதனால் நான்
மதிய உணவைப் சாப்பிட
ஆரம்பித்துவிட்டேன். ஆனால், ஸ்கைப்பை சைன் அவுட் செய்ய மறந்துவிட்டேன். இந்த
குழப்பத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இதில் எந்த குற்றமும்,
அவமரியாதையும் இல்லை என ரிப்ளை செய்துள்ளார்.
இதற்கு ட்விட்டர்வாசி ஒருவர் "எனக்கு ஒரு கேள்வி... அந்த நேரத்தில் நீங்கள் சேமியா சாப்பிட்டீர்களா? என கேட்டதற்கு கஸ்தூரி...
" இல்லை நான் பொங்கல்
சாப்பிட்டேன் " அப்போது சைட்ல கத்திக்கிட்டு கிடந்த அர்னாப் சத்தத்தை மறந்து
தூங்க முடியும் என்று நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். கஸ்தூரின் இந்த செயல்
அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
I need the confidence level of this
lady in my life. pic.twitter.com/DoWWQgBKgc
— Scotchy(Chronological) (@scotchism) July 19, 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக