தற்சமயம்
வெளிவந்த தகவலின்படி சமூகவலைதளம், தகவல் பரிமாற்றம் மற்றும் டேட்டிங் செயிலகளை குறிவைக்கு
புதிய ஆண்ட்ராய்டு மால்வேரை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து
இருக்கின்றனர்.
குறிப்பாக
பிளாக்ராக் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பேங்கிங் ட்ரோஜன் ஆகும். பேங்கிங்
ட்ரோஜன் என்றாலும் இது பேங்கிங் அல்லாத செயலியையும் குறிவைக்கிறது. முதலில் கூகுள்
அப்டேட் போன்று இயங்கி தேவையான அனுமதி பெறப்பட்டதும், ஆப் டிராயிரில் இருந்து
ஐகானை
மறை செய்து தகவல் சேகரிக்கும் பணிகளை துவங்கும் என்று கூறப்படுகிறது.
தற்சமயம்
நெதர்லாந்தை சேர்ந்த திரெட்ஃபேப்ரிக் என்ற சைபர் செக்யூரிட்டி ஆய்வு நிறுவனம் மே
மாத வாக்கில் பிளாக்ராக் மால்வேர் விவரங்களை கண்டறிந்து. இது பயனர் குறியீடு
கடவுச்சொல் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை திருடும் திறன்
கொண்டிருக்கிறது.
அதாவது
வழக்கமான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் செயலிகளை போன்றே பிளாக்ராக் மால்வேர் இருக்கிறது,
ஆனாலும் இது 337 செயலிகளை குறிவைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது
வழக்கமான மால்வேர்களைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக