லெனோவா
நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது,குறிப்பாக
இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல
வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் பல லேப்டாப் நிறுவனங்கள் ரைசன்
4000 சீரிஸ் பிராசஸர்கள் கொண்ட கேமிங் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய வண்ணம்
உள்ளன.
அந்த
வரிசையில் லெனோவா நிறுவனமும் லீஜியன் 5 17.3 இன்ச், 15.6 இன்ச், ஐடியாபேட் கேமிங்
3 லேப்டாப்களை புதிய ஏஎம்டி வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த
சாதனங்கள் உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
லெனோவா
லீஜியன் கேமிங் லேப்டாப் சாதனங்கள் லீஜியன் 5 மற்றும் லீஜியன் 5பி என இரண்டு
மாடல்களில் கிடைக்கிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், லெனோவோ லீஜியன் 5 - 15.6
இன்ச் மற்றும் 17.3 என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
இதனுடன்
ஏஎம்டி ரைசன் 7 4800ஹெச் சீரிஸ் மொபைலட பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ்
2060 ஜிபியு. அதிகபட்சம் 16ஜிபி 3200மெகாஹெர்ட்ஸ் டிடிஆர்4 மெமரி,1டிபி பிசிஐ,
எஸ்எஸ்டி அம்சங்களுடன் கான்ஃபிகர் செய்ய முடியும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் ஏஎம்டி ரைசன் 7 4800 ஹெச் சீரிஸ் மொபைல்
பிராசஸர் வசதியுடன் என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2060ஜிபியு. அதிகபட்சம் 32ஜிபி
3200மெகாஹெர்ட்ஸ் டிடிஆர்4 மெமரி, அதிகபட்சம் 1டிபி பிசிஐ, எஸ்எஸ்டி உடன் கான்ஃபிகர்
செய்து கொள்ள முடியும்.
மேலும்
இந்த புதிய சாதனங்களில் டூயல் பர்ன் சப்போர்ட், லெனோவோ கியூ கண்ட்ரோல் 3.0
வழங்கப்பட்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் 5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், ஃபுல் ஹெச்டி
பேனல், டால்பி அட்மோஸ் மற்றும் 4 சோன் ஆர்ஜிபி சிஸ்டம் பேக்லைட்டிங் வழங்கப்பட்டு
இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
லெனோவா
நிறுவனத்தின் அதிநவீன ஐடியாபேட் கேமிங் 3 ஏஎம்டி ரைசன் 7 4800ஹெச் சீரிஸ் மொபைல்
பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650டிஐ ஜிபியு வசதி வழங்கப்படுகிறது.
பின்பு மேம்பட்ட தெர்மல் டிசைன், லெனோவா கியூ கண்ட்ரோல் 3.0, 120 ஹெர்ட்ஸ்
ரிஃப்ரெஷ் ரேட், ஃபுல் ஹெச்டி பேனல், அதிகபட்சம் 32 ஜிபி டிடிஆர்4 ரேம், 1 டிபி
பிசிஐ, எஸ்எஸ்டி வசதி வழங்கப்படுகிறது.
17.3-இன்ச்
லெனோவா லீஜியன் 5 லேப்டாப் மாடல் ஆனது வரும் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1089.99 டாலர்கள், இந்திய மதிப்பில்
ரூ.81,730-ஆக உள்ளது. மேலும் 15.6-இன்ச் லெனோவா லீஜியன் 5 லேப்டாப் மாடலின் விலை
759,99டாலர்கள்,
இந்திய
மதிப்பில் ரூ.56,985-ஆக உள்ளது. பின்பு 15-இன்ச் ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப்
மாடலின் விலை 659,99டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.49,487-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக