இந்தியா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை 1,100 பேர் மீது விரைவில் நடத்த உள்ளது...!
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் (Bharat Biotech) தயாரித்த இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின், அடுத்த வாரத்திற்குள் மனிதர்கள் மீதான பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவாக்சின், இது கொரோனா வைரஸ் (COVID-19) நாவலுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும், மேலும் ICMR மற்றும் புனேவின் NIV உடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது. கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை சுமார் 1,100-க்கும் மேற்பட்டவர்கள் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. மனிதர்களுக்கு மருந்து அளிக்கும் பரிசோதனை, சில மாதங்களுக்கு முன் துவங்கியது, தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்துடன் இணைந்து, 'COVAXIN' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
சர்வதேச நடைமுறைகளின்படி, ஒரு தடுப்பூசியை தயாரிக்க, 16 - 18 மாதங்கள் தேவை; கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்ட வேண்டாம்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'சர்வதேச விதிகள், நடைமுறைகளுக்கு உட்பட்டே பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன' என, ICMR மற்றும் பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், மனிதர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பரிசோதனையை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், 375 பேருக்கும், இரண்டாம் கட்டத்தில், 750 பேருக்கும் தடுப்பூசி அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிசோதனைக்காக, நாடு முழுதும், 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில மையங்களில், தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதனை செய்வது நேற்று துவங்கியுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம், விரைவில் இந்த தடுப்பூசி மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக