Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

மீன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் மீண்டெழும் மீன ராசி அன்பர்களே..!!

நடைமுறையில் ராகுவானவர் மீன ராசிக்கு நான்காம் இடத்திலும், கேதுவானவர் பத்தாம் இடத்திலும் இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் மீன ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் மூன்றாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது ஒன்பதாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

திட்டமிட்ட சில காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் இருக்க வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். 

சாத்தியமான செயல்பாடுகள் மற்றும் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாராத சில நபர்களின் உதவிகள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைபாடுகள் குறையும். குடும்ப வாழ்க்கையில் இருந்துவந்த வெறுப்புணர்வு நீங்கி சுமூகமான சிந்தனைகளும், எண்ணங்களும் உண்டாகும்.
பெண்களுக்கு :

மனதிற்கு பிடித்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உபரி வருமானம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்களின் மீது உண்டாகும் சஞ்சலமான எண்ணத்தை குறைத்து கொள்வதன் மூலம் மனதில் தெளிவும், உத்வேகமும் உண்டாகும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் வளரும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். நண்பர்களின் விஷயங்களில் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பது நல்லது. பழக்கவழக்கம் தொடர்பான சில செயல்பாடுகளில் மாற்றத்திற்கான சூழ்நிலைகள் அமையும்.
கப்பல் கட்டுமான தொழில் புரிபவர்களுக்கு :

கப்பல் கட்டுமான தொழிலில் இருந்துவந்த சில தடைகள் குறையும். எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் திட்டமிட்ட பணியை உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
நகை வியாபாரிகளுக்கு :

நகை தொடர்பான வியாபாரத்தில் நுணுக்கமான பல விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளினால் மேன்மை அடைவீர்கள். கடன் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
பண்ணை தொழில் புரிபவர்களுக்கு :

கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை சார்ந்த தொழிலில் இருந்துவந்த தடைகள் மற்றும் தேக்க நிலைகள் நீங்கி லாபமும், முன்னேற்றமும் அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நான்கு கால் பிராணிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
முத்து தொடர்பான தொழில் புரிபவர்களுக்கு :

புதிய தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகள் மேம்படும். வாடிக்கையாளர்களின் மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எனினும், அரசு தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு :

வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பாராத பிறமொழி நண்பர்களின் உதவியால் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் மற்றும் அபிவிருத்திக்கான செயல்பாடுகள் மேம்படும். ஒப்பந்தம் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ள வேண்டும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளை விரைந்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து அதை வித்தியாசமான முறையில் எதிர்கொள்வீர்கள். புதிய வேலைவாய்ப்பு சார்ந்த முயற்சிகள் எண்ணிய வண்ணம் ஈடேறும்.
விவசாயிகளுக்கு :

பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நன்மை அதிகரிக்கும். விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான அனுபவம் நிறைந்த வேலையாட்களின் ஆலோசனைகளும், உதவிகளும் சாதகமாக அமையும். சிறிய அளவிலான முதலீடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். சட்டம் நிமிர்த்தமாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறைவதற்கான காலக்கட்டங்கள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கட்சியின் தலைமை இடத்தில் வித்தியாசமான விளம்பர உத்திகளின் மூலம் பிரபலமடைவீர்கள். ஆன்மிகம் மற்றும் சமய சடங்கு நிமிர்த்தமான செயல்பாடுகளில் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வப்போது உங்களின் மீதான அவப்பெயர் ஏற்பட்டு மறையும். கட்சி பணிகளில் புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை குறைத்து கொள்ள வேண்டும்.
கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். சொகுசு வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்க பெறுவீர்கள். உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் மஞ்சள் நிற பூக்களினால் அம்மனை வழிபாடு செய்துவர செய்யும் முயற்சிகளுக்கு உதவிகள் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக