நிதானமாக
இருந்து காரியத்தை சாதிக்கும் கும்ப ராசி அன்பர்களே..!!
நடைமுறையில்
ராகுவானவர் கும்ப ராசிக்கு ஐந்தாம் இடத்திலும், கேதுவானவர் பதினொன்றாம்
இடத்திலும், இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் கும்ப ராசிக்கு
போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் நான்காம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான
கேது பத்தாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.
நீண்ட
நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான
பணிகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்க பெறுவீர்கள். வெளி உலக நண்பர்களின் அறிமுகம்
மற்றும் உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். ஜவுளி நிமிர்த்தமான பணிகளில்
இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாலின மக்களினால் புதுவித
அனுபவங்கள் உண்டாகும். ஆன்மிக சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு மகான்களின்
தரிசனம் கிடைக்க பெற்று மனம் மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் கலைசார்ந்த அறிவுகள்
மேம்படும்.
பெண்களுக்கு :
உடல்
ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் பெண்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
மனதில் புதுவிதமான சிந்தனைகளும், எண்ணங்களும் உண்டாகும். அறிமுகமில்லாத புதுவிதமான
பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு
ஏற்ப அனுசரித்து செல்லவும். சபை நிமிர்த்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு
முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு
நினைவாற்றல் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உயர்நிலை கல்வி பயிலும்
மாணவர்கள் பொழுதுபோக்குகளை குறைத்து கொள்வது நன்மை அளிக்கும். வித்தியாசமான சில
முயற்சிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உயர்கல்வியில் நுட்பமான சில
விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.
ஆராய்ச்சி நிபுணர்களுக்கு :
ஆராய்ச்சி
சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். ஆத்ம ரீதியான
புதிய தேடல்கள் புதுவிதமான கண்ணோட்டத்தை உருவாக்கும். எதிர்பார்த்திருந்த பதவி
உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த சில
கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான சூழல் அமையும்.
தற்காப்பு கலை நிபுணர்களுக்கு :
தற்காப்பு
கலை சார்ந்த நிபுணர்களுக்கு எதிர்பார்த்திருந்த அங்கீகாரங்களும், வாய்ப்புகளும்
சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த நீண்டநாள் கவலைகள் அகலும். போட்டிகளில்
ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
ஆன்மிக பொருட்கள் விற்பனையாளர்களுக்கு
:
இறை
வழிபாடு தொடர்பான பொருட்களில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், லாபமும்
மேம்படும். ரசாயனம் இல்லாத இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான
அங்கீகாரங்களும், வரவேற்புகளும் கிடைக்க பெறுவீர்கள்.
வடிவமைப்பாளர்களுக்கு :
ஆடை
வடிவமைப்பு துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் நன்மை
உண்டாகும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்தி
கொள்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்தி கொள்ள முடியும். சக கலைஞர்களிடம்
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாய
பணிகளில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். புதிய
மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு முயற்சியாக இருந்தாலும் அதனால்
எதிர்பாராத பல பலன்களை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான
சூழ்நிலைகளும், மனநிறைவும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளியூர் பயணங்கள் சாதகமாக
அமையும். உபரி வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவீர்கள். வர்த்தகம்
நிமிர்த்தமான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கவனக்குறைவினால்
சிறு சிறு அவப்பெயர்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்
துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பல குழப்பங்களில் இருந்து தெளிவு
கிடைக்கும். புதிய கட்சி மற்றும் பொறுப்புகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
நேர்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படக்கூடிய நபராக
விளங்குவீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியமும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்க
பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில்
நன்மதிப்பை பெறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில்
இருப்பவர்களுக்கு தடைபட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் தேவையற்ற
ரகசியங்களை பகிர்வதை குறைத்து கொள்ள வேண்டும். செய்யும் செயல்களில் மூத்த
கலைஞர்களின் ஆலோசனை பெற்று செய்வதன் மூலம் தெளிவு பெறுவீர்கள். உயர் பதவியில்
இருப்பவர்களின் அறிமுகமும், வழிகாட்டுதலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும்.
கிடைக்கும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தும்போது அதற்கான பலன்கள் சாதகமாக
அமையும்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும்
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, மஞ்சள் நிற மலர்களால் வராகி அம்மனை வழிபாடு செய்து வர
பூர்வீக மற்றும் புத்திரர்கள் தொடர்பான கவலைகள் அகலும்.
மேற்கூறப்பட்டுள்ள
பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின்
திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக