Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

மகர ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தன்னம்பிக்கை தளராத மகர ராசி அன்பர்களே..!!

நடைமுறையில் ராகுவானவர் மகர ராசிக்கு ஆறாம் இடத்திலும், கேதுவானவர் பனிரெண்டாம் இடத்திலும் இருக்கின்றார். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் மகர ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் ஐந்தாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது பதினென்றாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

ஆன்மிகம் தொடர்பான சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத பொருள் மற்றும் வாகன சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எண்ணிய எண்ணம் ஈடேறும். மருமகன் வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டு கொடுத்து செல்லவும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான பலன்களே கிடைக்கும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு பூர்வீகம் தொடர்பான சொத்துக்கள் கிடைப்பதில் சில காலதாமதம் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகம் நிமிர்த்தமான முக்கிய கோப்புகள் மற்றும் அதிகாரம் சார்ந்த பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயமும், ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு :

பழக்கவழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் சிற்சில மாற்றங்கள் நேரிடும். தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்து கொள்ளவும். விளையாட்டு சார்ந்த துறைகளில் தடைபட்ட சில வாய்ப்புகளும் கிடைக்க பெறுவீர்கள். உயர்நிலை சார்ந்த கல்வியில் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தெளிவான பாதையை உருவாக்கி தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டுகளும் சற்று காலதாமதமாக கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக நிமிர்த்தமாக வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :


மூலிகை சார்ந்த விளைச்சலில் அனுகூலம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான காரியங்கள் ஈடேறும். பாசன வசதி மேன்மை அடையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். விவசாயம் சார்ந்த பணிகளில் வாரிசுகளுக்கு முன்னின்று வழிகாட்டுவதன் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

நூல் தொடர்பான தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். ஆன்மிக பொருட்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வாகன உதிரி பாகங்கள் தொடர்பான வியாபாரத்தில் அதிக முதலீடுகள் செய்யும்போது சற்று சிந்தித்து செயல்படவும். வேலையாட்களின் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற விரயச் செலவுகளை குறைத்து கொள்ள இயலும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் உரையாடலின்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எதிர்காலம் சார்ந்த புதிய செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். கட்சி சார்ந்த பணிகளில் வாரிசு தலையீடுகளை குறைத்து கொள்வது நன்மை அளிக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். பாரம்பரியம் தொடர்பான கலை தொழிலில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகள் அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் சப்த கன்னிமார்களை வணங்கி ஏழு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வெள்ளை நிற பூக்களால் வழிபாடு செய்து வர பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக