Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

பொறுமையுடனும், நிதானத்துடனும் சிந்தித்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் தனுசு ராசிக்கு ஏழாம் இடத்திலும், கேதுவானவர் லக்னத்திலும் இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் தனுசு ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் ஆறாமிடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது பனிரெண்டாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.
 முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவும். அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவான சூழ்நிலைகள் அமையும். செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். 
வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது தேவையற்ற மனக்கசப்புகளை குறைக்கும். கணவன்-மனைவியிடையே கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவையற்ற வேற்றுமைகள் அகலும். மருத்துவம், வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். மின்னணு கருவிகள் மற்றும் பழுது பார்க்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.
பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் பெண்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், சில நபர்களால் புதிய அனுபவங்களும் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் கோப்புக்களில் கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்த புதிய வாகனங்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். பணிகளில் எதிர்பார்த்திருந்த முன்னேற்றமான வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு வித்தியாசமான சில அணுகுமுறைகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சமவயது மாணவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வி நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் நேர்மையுடன் செயல்படும் பொழுது முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி துறைகளில் எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதத்திற்கு பின்பே கிடைக்கும். ஆகையினால் மனம் தளராமல் முயற்சி செய்வதன் மூலம் நன்மை அடைவீர்கள்.
வியாபாரிகளுக்கு :

வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கிடைக்கும் லாபங்களை தகுந்த முறையில் சேமித்து வைத்துக்கொள்ளவும். புதிய நபர்களின் ஆலோசனைகளின் மூலம் முதலீடுகள் செய்யும் பொழுது துறை நிமிர்த்தமான நிபுணர்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகம் நிமிர்த்தமான துறைகளில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் பயன்படுத்துதல் அதிகரிக்கும். எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் சார்ந்த கருத்து உரையாடல்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணி நிமிர்த்தமான செயல்களை உத்வேகத்துடன் செயல்படுத்துவது தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும்.
விவசாயிகளுக்கு :

விவசாயம் தொடர்பான பணிகளில் பயிறு விளைச்சலுக்காக பயன்படுத்தும் ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் காலதாமதம் ஏற்பட்டாலும் நிலையான லாபங்கள் உண்டாகும். கால்நடை வளர்ப்புகள் மூலம் ஆதாயமும், மேன்மையும் அடைவீர்கள். அருகில் இருக்கும் நில உரிமையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வரப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
வழக்கறிஞர்களுக்கு :

வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் புதுமையான விஷயங்கள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் பல பிரச்சனைகளை முடித்து வைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ஆன்மீக பெரியோர்களுக்கு :

ஆன்மீகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சில முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொது வாழ்க்கை பற்றிய புரிதலும், அது தொடர்பான சில காரியங்களும் சாதகமாக அமையும். எவரிடத்திலும் கோபமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு :

ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிராமல் இருப்பது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் பற்றிய சில கசப்புணர்வுகள் ஏற்படும்.
தோட்டத்துறையில் இருப்பவர்களுக்கு :

தோட்டம் சார்ந்த துறையில் இருப்பவர்கள் ரசாயன உரங்களை பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களின் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தவும், லாபங்களை உயர்த்தவும் இயலும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மூலம் விரயச் செலவுகள் நேரிடலாம்.
சந்தைப்படுத்துதல் (Marketing) துறையில் இருப்பவர்களுக்கு :

சந்தைப்படுத்துதல் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கு உண்டான ஆதாயமான பலன்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மற்றும் துறை வல்லுநர்களின் அறிமுகங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், துறை நிமிர்த்தமான புரிதலும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்காலம் நிமிர்த்தமான சில பணிகளில் அதிக முதலீடுகளை குறைத்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறமொழி பேசும் அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களிடம் கட்சி சார்ந்த விஷயங்களையும், தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்வதை குறைத்து கொள்வது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும்.
கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்கள் சக கலைஞர்களை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளை தாமரை மலர்களால் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர பணி நிமிர்த்தமான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக