சூழ்நிலைக்கு ஏற்ப தனது வியூகங்களை
மாற்றி அமைத்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் விருச்சிக
ராசிக்கு எட்டாம் இடத்திலும், கேதுவானவர் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இனி
வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் விருச்சிக ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான
ராகுவானவர் ஏழாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது ராசியிலும் பெயர்ச்சி
அடைய இருக்கின்றனர்.
செய்யும் காரியங்களில் இருந்துவந்த
எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் காரியத்தை
மாற்றியமைத்து வெற்றியடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வதற்கான சூழ்நிலைகள்
உண்டாகும். நெருப்பு தொடர்பான காரியங்களில் ஈடுபடும்போது சற்று விழிப்புணர்வுடன்
இருக்க வேண்டும். நினைவாற்றலில் உண்டாகும் மந்தத்தன்மையினால் சில காரியங்களில்
காலதாமதம் ஏற்பட்டு மறையும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில்
இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். புதிய செத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள்
ஏற்படும். பங்காளி வகையில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
பெண்களுக்கு
:
பெண்களுக்கு தூரத்து உறவினர்களின்
மூலம் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உணவு சார்ந்த விஷயங்களில்
கவனத்துடன் இருந்தால் மட்டுமே வயிறு தொடர்பான பிரச்சனைகளை குறைத்து கொள்ள இயலும்.
நீண்ட நாட்களாக செல்ல நினைத்த ஆன்மிக வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான
வாய்ப்புகள் ஏற்படும். பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் எதிர்பார்த்த
முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு
:
சட்டம் சார்ந்த கல்வி பயிலும்
மாணவர்களுக்கு நுணுக்கமான பல விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.
எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் மூலம்
குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான துறையில்
இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சித்த மற்றும் ஆயுர்வேத தொடர்பான
மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள்
உண்டாகும்.
விவசாயிகளுக்கு
:
விவசாய பணியில் இருப்பவர்களுக்கு வேலை
ஆட்கள் மூலமாக சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். கிழங்கு வகை உணவுகள்
மற்றும் புளிப்பு சார்ந்த உணவு பொருட்கள் மூலம் லாபங்களை அடைவீர்கள். மண்பானை
தொடர்பான வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுகள் மேம்படும்.
மர
வியாபாரகளுக்கு :
மர வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில்
அலைச்சலுக்கு பின்பு லாபம் கிடைக்க பெறுவீர்கள். முட்செடி மற்றும் அடர்ந்த
வனப்பகுதிகளில் செல்லும்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கொம்புள்ள
கால்நடைகளின் மூலம் லாபங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சமூக விதிகளுக்கு
உட்பட்டு நடப்பதன் மூலம் மனத்தெளிவும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
வங்கி
அலுவலர்களுக்கு :
எதிர்பாராத இடமாற்றத்தினால் மனதில்
சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஏற்பட்டிருந்த அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள்
குறையும். கவனக்குறைவினால் கொடுக்கல், வாங்கலில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும்.
அதனால் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்களுக்கு உதவும்போது தகுந்த
கோப்புகள் உள்ளதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து அல்லது உயர் அதிகாரிகளிடம் கலந்து
ஆலோசித்து முடிவெடுப்பது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும்.
எலக்ட்ரிக்கல்
தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு :
எலக்ட்ரிக்கல் சார்ந்த தொழிலில்
இருப்பவர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கு உண்டான
அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள். புதிய கருவிகளின் வரவு மற்றும் அது தொடர்பான
செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல் காரிய தாமதத்தை குறைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற
பேச்சுக்களை குறைத்து கொள்வது நன்மையை அளிக்கும். எதிர்பாராத சில மாற்றங்களின்
மூலம் மேன்மை அடைவீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன்
இருக்க வேண்டும். புதிய நபர்களை நம்பி பெரிய முதலீடுகளை செய்யும்போது உரிய ஆலோசனை
பெற்று முடிவு செய்வது சேமிப்பை பாதுகாக்கும்.
வியாபாரிகளுக்கு
:
பிளாஸ்டிக் தொடர்பான வியாபாரத்தில்
அதிக முதலீடுகளை குறைத்து கொள்வது நன்மையளிக்கும். பிற மொழி பேசும் மக்களின் மூலம்
தொழில் சார்ந்த உதவிகளை கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகள்
மற்றும் வியாபாரத்தின் மூலம் லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
:
அரசியல் சார்ந்த பல நுணுக்கமான
விஷயங்களை புரிந்து கொள்வதற்கான காலக்கட்டங்கள் உண்டாகும். உலகியல் வாழ்க்கை
பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளின் மூலம் நீண்ட
நாட்களாக நிலுவையில் இருந்துவந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பீர்கள். வசதி
வாய்ப்புகளும், செல்வ சேர்க்கைகளும் மேம்படும்.
கலைஞர்களுக்கு
:
கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள்
எந்த செயலிலும் உறுதி தன்மையுடன் செயல்படுவதன் மூலம் மேன்மை உண்டாகும்.
எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தேடி வரும் காலம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு
சென்று வருவதன் மூலம் செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி முன்னேற்றம்
ஏற்படும். மூத்த கலைஞர்களிடம் ஆணவமின்றி செயல்படுவதன் மூலம் அனைவரிடத்திலும்
பாராட்டும், ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள்.
வழிபாடு
:
செவ்வாய்க்கிழமைதோறும் சிவப்பு நிற
பூக்களால் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எதிர்காலம் தொடர்பான செயல்களில்
இருந்துவந்த தடைகள் அகலும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும்
பொதுப்பலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம்
உண்டாகும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக