Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் துலாம் ராசிக்கு ஒன்பதாம் இடத்திலும், கேதுவானவர் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றார். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் துலாம் ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் எட்டாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது இரண்டாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல்-வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களிடத்தில் இருந்து வரும் சுபச்செய்திகளின் மூலம் சுபவிரயமும், அலைச்சலும் ஏற்படும். பேசும்போது வார்த்தைகளில் சற்று கவனம் வேண்டும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு எதிர்பாராத விதமாக பொருட்சேர்க்கை உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் மூலம் தனவரவுகள் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உடனிருக்கும் தோழிகளிடம் தேவையற்ற கருத்து பரிமாற்றங்களை குறைத்து கொள்வது நன்மை அளிக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும்போது கவனம் வேண்டும்.

மாணவர்களுக்கு :

ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பொறுமையுடன் கடைபிடிப்பதன் மூலம் முன்னேற்றமும், பாராட்டும் பெறுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டிலும், பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளும், அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடக்கூடிய காலங்களும் அமையும். மூத்த உடன்பிறப்புகளிடம் கணக்கு வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு :

விவசாயம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வேலையாட்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பாசன வசதி தன்மைக்கு ஏற்ப விவசாய பயிர்களை தேர்வு செய்து கொள்வது விளைச்சலை அதிகப்படுத்தும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளில் எதிர்பார்த்த உயர்வும், அங்கீகாரமும் காலதாமதமாக கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான கோப்புகள் மற்றும் நவீன கருவிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். கட்சி நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

கலைஞர்களுக்கு :

ரசிகர்களின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளை மலர்களால் துர்க்கை அம்மனை ராகு நேரத்தில் வழிபாடு செய்துவர நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக