இந்தியாவில்
தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக
புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்பது
இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
சென்ற
24 மணி நேரத்தில் இந்தியாவில் 55,079 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த
எண்ணிக்கை 27,02,742 ஆக அதிகரித்துள்ளது.
அதே
சமயம் தினசரி உயர்ந்து வரும் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3வது
நாளாகக் குறைந்துள்ள மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
27.02,742
நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,77,779 நபர்கள் கொரோனா
தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 51,797 நபர்கள் கொரோனா தொற்று பாதிப்பால்
சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது 6,73,166 நபர்களுக்கு கொரோனாவிற்கு
எதிரான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக