ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்ட
பலர் நடித்திருந்த படம் ராட்சசன். இந்த திரைப்படம் அக்டோபர் 5, 2018 ல் வெளிவந்தது
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சைக்கோ திரில்லர் படம் தற்போது ஐஎம்டிபி இணையதளத்தில் தமிழ் பாடங்களில் அதிக ரேட்டிங் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் விக்ரம் வேதா படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அளவில் ராட்சசன் படத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் இரண்டு இடங்களில் பாலிவுட் படங்கள் இருக்கின்றன. இந்திய அளவில் மூன்றாவது இடம், தமிழ் சினிமாவில் முதல் இடம் என சத்தமில்லாமல் ராட்சசன் படம் செய்திருக்கும் சாதனை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
படக்குழுவினர் ட்விட்டரில் மகிழ்ச்சியை பதிவிட்டு இருந்தார்கள். இயக்குனர் ராம்குமார் ட்விட்டரில் அந்த IMDB ரேட்டிங் ஸ்கிரீன் ஷாட் பதிவிட்டு 'மொத்த ராட்சசன் குழுவினருக்கும் நன்றி' என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இதுபற்றி பேசி இருந்த விஷ்ணு விஷால், "ராட்சசன் எப்போதும் அதனுடைய சாதனைகளை அதுவே முறியடிக்கிறது. உங்களது அன்புக்கு நன்றி" என பதிவிட்டு இருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வேண்டுமென ட்விட்டரில் ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்த விஷ்ணு, "நிச்சயமாக இயக்குனர் ராம்குமார் ராட்சசன் 2 ஸ்கிரிப்ட் ரெடியா?" என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் ராம்குமார் "போயிட்டு இருக்கு" என கூறியிருக்கிறார். இதனால் அவர் தற்போது அதன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.
இயக்குனர் ராம் குமாருக்கு பதிலளித்த விஷ்ணு சூப்பரோ சூப்பர் என குறிப்பிட்டிருக்கிறார். விஷ்ணு மற்றும் இயக்குனர் இப்படி ட்விட்டரில் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் ராட்சசன் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு தற்போது கைவசம் நான்கு படங்கள் வைத்து இருக்கிறார். நடிகர் ராணா உடன் அவர் இணைந்து நடித்து இருக்கும் காடன் படம் ரிலீஸுக்கு தயராக இருக்கிறது. கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன் தான் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார். அது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலமாக விஷ்ணு தெலுங்கில் அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஷ்ணு நடிப்பில் ஜெகஜால கில்லாடி, எப்ஐஆர் போன்ற படங்கள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. அடுத்து மோகன்தாஸ் என்ற சைக்கோ த்ரில்லர் படத்தில் விஷ்ணு நடிக்க உள்ளார். அந்த படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அதில் விஷ்ணு கையில் சுத்தியினை வைத்து யாரையோ வெறிகொண்டு அடிப்பது போல காட்டப்பட்டு இருந்தது. மோகன் தாஸ் படத்தின் ஷூட்டிங் கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு தான் துவங்க உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக