ஏர்டெல்
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தரவு கூப்பன்கள் வடிவில் 2 ஜிபி இலவச டேட்டா
கிடைக்கும் ஒரு புதிய வாய்ப்பை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இலவச
2 ஜிபி டேட்டா நன்மையை எப்படி பெறுவது? அதை எப்படி பயன்படுத்துவது என்று
தெரிந்துகொள்ளலாம்.
பாரதி ஏர்டெல் -
பெப்சிகோ கூட்டு
பாரதி
ஏர்டெல் நிறுவனம், உலகளாவிய பானம் மற்றும் சிற்றுண்டி பிராண்டான பெப்சிகோ
நிறுவனத்துடன் இணைந்து புதிய சலுகையை ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக
அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெப்சிகோ
தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் வாங்கும் போது தரவு கூப்பன்கள் வடிவில் 2 ஜிபி
இலவச தரவை வெல்லும் வாய்ப்பை நிறுவனம் தற்பொழுது வழங்கியுள்ளது.
2 ஜிபி இலவச தரவை எவ்வாறு வெல்வது?
ஏர்டெல்
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த சலுகை செல்லுபடியாகும், வெவ்வேறு
கூப்பன் கோடுகளை பயன்படுத்தி இந்த சலுகையை ஒரு பயனர் அதிகபட்சமாக 3 முறை
பயன்படுத்திக்கொள்ளலாம். பெப்சிகோ தயாரிப்புகளான லேஸ் சிப்ஸ், டோரிடோஸ் மற்றும்
குர்குரே போன்ற பேக்களுடன் இந்த கூப்பன் கோடு கிடைக்கும். பாக்கெட்டின்
உட்புறத்தில் 12 இலக்க ஏர்டெல் கூப்பன் கோடு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்
உங்களிடம் உள்ளதா?
உங்களுக்கு
கிடைக்கும் கூப்பன் கோடுகளை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயன்பாட்டில் உள்ள மை கூப்பன்
பிரிவிற்கு சென்று சலுகைகளை பெறவேண்டும். இலவச தரவுகளின் அளவு பயனர்கள் வாங்கிய
பாக்கெட்டின் எம்ஆர்பி விலையைப் பொறுத்தது என்பதை ஏர்டெல் ப்ரீபெய்ட்
வாடிக்கையாளர்கள் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். ரூ.10 மற்றும் ரூ.20
பாக்கெட்களில் இந்த கூப்பன் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கூப்பன்
கோடுகள் கிடைக்கும் பாக்கெட்டுகள்
இந்த புதிய சலுகை பொருந்தக்கூடிய
பெப்சிகோ தயாரிப்புகளின் விபரங்களை பார்க்கலாம். உங்களுக்கான தனித்துவமான கூப்பன்
கோடுகள் பெப்சிகோ பிராண்டின் நான்கு வெவ்வேறு தயாரிப்புகளில் கிடைக்கிறது, அவை
லேஸ் சிப்ஸ், குர்குரே, டோரிடோஸ் மற்றும் அங்கிள் சிப்ஸ் இன் ரூ .10 மற்றும் ரூ
.20 பாக்கெட்டுகளின் மூலம் கிடைக்கிறது.
கண்டிப்பாக இதை
மறக்க வேண்டாம்
ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்
இந்த சலுகையின் கீழ் இலவச 2ஜிபி டேட்டாவை பெற சலுகை கிடைக்கும் சிப்ஸ்
பாக்கெட்டுகளை கவனித்து பார்த்து வாங்க வேண்டும். பெப்சிகோ தயாரிப்புகளில் விளம்பர
சலுகை இல்லாத பாக்கெட்களும் புழக்கத்தில் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். எனவே,
வாங்கும் தயாரிப்புகளில் விளம்பர சலுகை இருப்பதை உறுதிப்படுத்தி வாங்க வேண்டும்.
விளம்பர சலுகை
கிடைக்கும் மற்றும் நிபந்தனைகள்
ஏர்டெல் மற்றும் பெப்சிகோவின் இந்த
புதிய விளமப்ர சலுகை ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 31,2021 வரை தொடரும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பெரும் கூப்பன் கோடு எண்கள் ஜனவரி
31, வரை செல்லுபடியாகும். இந்த கூப்பன் கோடுகளை பயன்படுத்தி கிடைக்கும் இலவச
டேட்டா நன்மைக்கு மூன்று நாள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏர்டெல்
வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக