Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஆகஸ்ட், 2020

பெண்களே! உதட்டிற்கு மேல் வளரும் முடிகள் உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!


இன்று பல பெண்களுக்கு முகத்தில் ஆண்களை போல முடிகள் வளருவதுண்டு. அதிலும் அதிகமானோருக்கு உதட்டிற்கு மேல் வளரும் முடிகள் பெண்களின் அழகை கெடுப்பதாக உணருவதுண்டு. இதனை தடுப்பதற்காக சில பெண்கள் அடிக்கடி அழகு நிலையத்திற்கு சென்று, அந்த முடிகளை நீக்குவதுண்டு.
இவ்வாறு செய்வதால், இந்த முடிகள் நிராந்தரமாக வளராமல் இருப்பது இல்லை. இவ்வாறு செய்வதால், முடியின் வளர்ச்சி மேலும் தான் அதிகரிக்கும். இதற்கு நாம் நிரந்தரமான முறையில் தீர்வு காண வேண்டும் என்றால், இயற்கையான முறையை தான் பின்பற்ற வேண்டும்.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், உதட்டிற்கு மேல் உள்ள முடியை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
  • குப்பை மேனி இலை
  • வேப்பங்கொழுந்து
  • விரலி மஞ்சள்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் சம அளவில்  எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை மூன்றையும்,  நன்கு அரைத்து இரவில் தூங்க செல்வதற்கு முன், உதட்டின் மேல் பூசிக் கொண்டு படுக்க வேண்டும். காலை எழுந்தவுடன் இதனை கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால், இந்த தேவையற்ற முடிகள் வளர்வது தடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக