லெபனான்
தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது.
இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 3,700 பேர்
காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெய்ரூட்
துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த
விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
பெய்ரூட்டை உலுக்கிய சக்திவாய்ந்த வெடிவிபத்து "ஒருவித குண்டு" காரணமாக
ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்க தளபதிகள் தன்னிடம் கூறியதாக அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார். மேலும், "இது ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது"
என்று டிரம்ப் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக