நடிகர் சரத்குமாருக்கு அவரது செல்போன்
எண்ணில் இருந்தே அவருக்கு கால் வந்துள்ளது. இதில் பேசிய மர்ம நபர் குறித்து
போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமத்துவ
மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும்,
நடிகருமான சரத்குமார் சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை
அளித்துள்ளார். அதின் தன்னுடைய செல்போன் நம்பரில் இருந்து தனக்கே கால் வந்ததாகவும்
அதில் தன் குரலில் பேசுவது போல் வேறு சிலருக்கும் கால் சென்றதாகவும்
குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் யாருக்கும் போன் செய்யவில்லை இதுகுறித்து விசாரணை
நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சரத்குமாரின்
செல்போன் நம்பரில் இருந்து அழைப்பு
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,
நடிகருமான சரத்குமார் திருவான்மியூர் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வசித்து
வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சரத்குமாரின் செல்போன் நம்பரில்
இருந்து அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் முக்கிய விஐபிகளுக்கும், கட்சி
நிர்வாகிகளுக்கும் அழைப்பு சென்றுள்ளது.
அவரது
குரலிலேயே பேச்சு
மேலும் சரத்குமார் எண்ணில் இருந்து
போன் சென்று அவரது குரலிலேயே பேசியதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த
நிலையில் திடீரென சரத்குமார் எண்ணுக்கு விஐபி நபர் ஒருவர் போன் செய்துள்ளார். போன்
எடுக்கத்தவறிய சரத்குமார் மீண்டும் அந்த விஐபி எண்ணுக்கு அழைத்து சொல்லுங்க என்ன
விஷேசம் என கேட்டுள்ளார். அதற்கு அந்த விஐபி நீங்கள்தான் முதலில் கூப்பிட்டீர்கள்
என கூறியுள்ளார். இதனால் சரத்குமார் குழப்பமடைந்துள்ளார்.
அவரது
எண்ணில் இருந்தே கால்
இதற்கிடையில் சரத்குமார் எண்ணுக்கு
அவரது எண்ணில் இருந்தே கால் வந்துள்ளது. கால் அட்டண்ட் செய்த சரத்குமார் நீங்கள்
யார் என கேட்டுள்ளார். அதில் தான் சாதராரன ஆள் என கூறியுள்ளார். என் நம்பரை ஏன்
டூப்லிகேட் செய்து பேசுகிறீர்கள் என சரத்குமார் கேட்டுள்ளார். அதற்கு நான் உங்கள்
நம்பருக்கு போன் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை என அந்த நபர் பதிலளித்துள்ளார்.
ஒரு
ஆப் இருக்கு
நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என
சரத்குமார் கேட்டதற்கு. நான் கோவையை சேர்ந்தவர் என்பெயர் அசோக் நான் இன்ஜினியராக
பணியாற்றி வருகிறேன் என கூறியுள்ளார். ஏன் என் நம்பரில் இருந்து பிறருக்கு போன்
செய்கிறீர்கள் என சரத்குமார் கேட்டதற்கு தான் தப்பு ஏதும் செய்யவில்லை இதற்கென ஒரு
ஆப் இருக்கு அதைதான் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
ஆன்லைனில்
புகார்
இதுகுறித்து சரத்குமார் சென்னை போலீஸ்
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் விவரத்தை கூறி ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
அதோடு சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்து வருகின்றனர். ஆடியோவில் பேசிய
மர்மநபரின் பேச்சில் மலையாள தொனி தெரிந்ததாக சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். அதோடு
சரத்குமார் புதிய நம்பரை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
3
ஆண்டுகள் வரை சிறை தண்டனை
இதற்கென ஒருசில ஆப்கள் எளிதாக
கிடைக்கிறது எனவும் இந்த ஆப்கள் மூலம் நாம் யாருக்கு போன் செய்கிறோமோ அவர்களுக்கு
என்ன எண் காட்ட வேண்டும் என காலர் ஐடி கிரியேட் செய்ய முடியும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவர்கள் தெரியாமல் பயன்படுத்துவிட்டேன் என்று
கூறினாலும் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்டம் உள்ளது என
வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக