Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஆகஸ்ட், 2020

முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..!

சென்னை நிறுவனம்
கொரோனாவால் இந்திய பொருளாதாரம் மொத்தமாக முடங்கிக்கிடக்கும் இந்த வேளையிலும் ஒருவர் மட்டும் வர்த்தக வளர்ச்சியிலும், சந்தை மதிப்பீட்டிலும் றெக்கை கட்டி பறக்கிறார் என்றால் அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மட்டும் தான்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் மட்டுமே இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது டெலிகாம், ரீடைல், பைபர் ஆப்டிக் எனப் பல பிரிவுகளில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வர்த்தகத் துறைக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.
ஆன்லைன் பார்மா
இந்தியாவில் ஜியோ நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் சேவையில் புரட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள முகேஷ் அம்பானி, ஆன்லைன் மருத்து விற்பனை துறையில் இறங்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.
அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்
ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பைப்ர் ஆப்டிக் துறையில் முதலீட்டை ஈர்க்க கத்தார் முதலீட்டு நிறுவனத்துடனும், ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பியூச்சர் குரூப் நிறுவனத்துடனும் ஆலோசனை செய்து வரும் நிலையில், தற்போது ஆன்லைன் பார்மா துறையில் தனது வர்த்தகப் பாதையை விரிவாக்கம் செய்யப் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.
நிறுவன கைப்பற்றல்
ஆன்லைன் பார்மா துறையில் வர்த்தகத்தைத் துவங்கத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி புதியதாக ஒரு நிறுவனத்தை உருவாக்காமல் சந்தையில் ஏற்கனவே இத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார்.
சென்னை நிறுவனம்
இதன் படி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Netmeds நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றி ஆன்லைன் மருந்து விற்பனையில் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
120 மில்லியன் டாலர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Netmeds நிறுவனத்தை 120 மில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்தக் கைப்பற்றல் திட்டத்தை இதுவரை இரு நிறுவனங்களும் வெளிப்படையாகவும், அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கவில்லை. இதன் மூலம் இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே இருப்பது விளங்குகிறது.
பங்குச்சந்தை அதிரடி
இந்த அறிவிப்பு வெளியானதின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 7.10 சதவீதம் வரையில் உயர்ந்து சுமார் 2,151,15 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் இன்று காலை முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் எவ்விதமான சரிவும் இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
52 வார வளர்ச்சி
இன்றைய வளர்ச்சியின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 52 வார வளர்ச்சியை அடையை இன்னும் 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைய வேண்டும், குட்ரிட்டன்ஸ் கணிப்பின் படி அடுத்த இரண்டு நாட்களுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் புதிய உச்சத்தை அடையும் எனக் கணிக்கிறது.
சந்தை மதிப்பு
இன்றைய 7.10 சதவீத வளர்ச்சி மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 13.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
மேலும் ஆன்லைன் பார்மா துறையில் மும்பையைச் சேர்ந்த பார்மாஈஸி மற்றும் பெங்களூரின் மெட்லைப் ஆகிய நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கைப்பற்றல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ரிலையன்ஸ் வருகைக்கு முன்பாகவே ஆன்லைன் பார்மா துறையில் ஆட்டம் துவங்கியுள்ளது. இவ்விரு நிறுவனங்களின் ஒப்பந்த மதிப்பும் 120 முதல் 150 மில்லியன் டாலர் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக