Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஆகஸ்ட், 2020

கனவு விலையில் அறிமுகமான நோக்கியா C3 மாடல்!


எச்எம்டி குளோபல் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா சி3 மாடலை 8 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 3040 எம்ஏஎச் பேட்டரியுடன் சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. என்ன விலை... என்னென்ன அம்சங்கள்... இதோ முழு விவரங்கள்...

நோக்கியா பிராண்டின் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம், நோக்கியா சி3 எனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனை - அதன் சி தொடரின் சமீபத்திய நுழைவு நிலை சாதனமாக - சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது தடிமனான பெசல்களுடன் ஒப்பீட்டளவில் பழைய வடிவமைப்பு அழகியலுடன் வருகிறது, குறிப்பாக மேல் மற்றும் கீழ் பக்கங்களில். இது ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் பின்புறத்தில் ஒற்றை கேமராவுடன் வருகிறது.

நோக்கியா சி 3 ஒற்றை ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவில் இரண்டு வண்ண விருப்பங்களுடன் அறிமுகமாகி உள்ளயு. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவு மற்றும் சேமிப்பக விரிவாக்கத்துடன் வருகிறது, மேலும் மேப் செய்யப்பட்ட அம்சத்தை விரைவாக அணுகுவதற்கு பக்கவாட்டில் உள்ள ஒரு பொத்தானையும் கொண்டுள்ளது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விலை:

நோக்கியா சி3 மாடலின் சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.7,500 க்கு அறிமுகமாகி உள்ளது. இது நோர்டிக் ப்ளூ மற்றும் கோல்ட் சாண்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது. இது தற்போது சீனாவில் முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது, மற்றும் ஆகஸ்ட் 13 முதல் விற்பனைக்கு வருகிறது. தற்போது வரை, இதன் சர்வதேச அறிமுகம் மற்றும் விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.

நோக்கியா சி3 விவரக்குறிப்புகள் & அம்சங்கள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா சி3 ஸ்,ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இது 5.99 இன்ச் அளவிலான எச்டி+ (720x1,440 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை 400 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது யுனிசோக்கிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது, இது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எஃப் / 2.0 லென்ஸுடன் சிங்கிள் 8 மெகாபிக்சல் பட சென்சார் உள்ளது. எல்.ஈ.டி ஃபிளாஷ் கேமரா சென்சாருக்குக் கீழே செங்குத்தான நிலையில் உள்ளது. செல்பீக்களுக்காக, இதில் 5 மெகாபிக்சல் இமேஜ் சென்சார் (எஃப் / 2.4) உள்ளது. இது டிஸ்பிளேவிற்கு மேலே பெஸலில் வைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் மைக்ரோ ஜி.எஸ்.டி கார்டு (128 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை வைஃபை 802.11 பி / ஜி / என், 4 ஜி, ப்ளூடூத் வி 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது 5W சார்ஜிங் ஆதரவு கொண்ட 3,040 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது 31 மணிநேர ஆடியோ பிளேபேக்கையும் 7 மணி நேரம் வீடியோ பிளேபேக்கையும் வழங்கும்.

சென்சார்களை பொறுத்தவரை நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் ambient light, proximity, acceleration மற்றும் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஆகியவைகள் உள்ளன. இதில் ஒரு எக்ஸ்பிரஸ் பொத்தானும் உள்ளது, இது விரைவான அணுகலை வழங்கும்படி ஒரு அம்சத்துடன் அல்லது ஒரு ஆப்புடன் மேப்பிங் செய்யும் திறனை உங்களுக்கு வழங்கும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 159.9x77x8.69 மிமீ மற்றும் 184.5 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக