Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 19 செப்டம்பர், 2020

தயார் நிலையில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை! 10 ஆண்டுகள் உழைப்பு பிரதமரின் வருகைக்காக காத்திருப்பு

தயார்நிலையில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை... 10 ஆண்டுகள் உழைப்பு பிரதமர்  மோடியின் வருகைக்காக காத்திருப்பு! - Tamil DriveSpark

பத்து ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த அடல் சுரங்கப்பாதை தற்போது தயார்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்துக் காணலாம்.

உலக நாடுகளில் இதுவரை கட்டப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையைக் காட்டிலும் மிக நீளமான சுரங்க வழி பாதை ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பட்டத்தைச் சூடியிருக்கும் அப்பாதைக்கு அடல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. கடந்து பத்து ஆண்டுகளாக தயாராகி வந்த இச்சுரங்க பாதையே தற்போது தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த பாதை இமாசலத்தின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 8.8 கிமீ ஆகும். இந்த சுரங்கப்பாதை ரோடங் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. அதாவது அடல் டனல், ரோடங் என்ற பெயர் இந்த சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் இம்மாத இறுதிக்குள் பொது பயன்பாட்டிற்கு இந்த சுரங்கப்பாதைக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்றார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே இந்த புதிய உலகின் நீளமான சுரங்கப்பாதை மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த சுரங்கப்பாதையில் பாதுகாப்பு வசதிகளாக சிசிடிவி கேமிரா ஒவ்வொரு 60 மீட்டர்களுக்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, அவசர வெளியேறும் வழியும் ஒவ்வொரு 500 மீட்டர்களுக்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், அனைத்து தட்வெப்ப நிலைகளையும் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இச்சுரங்கப்பாதை கட்டமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தீ விபத்துகளைத் தடுக்கும் விதமாக தீயணைப்பான் கருவிகளும் சுரங்கப்பாதையில் நிறுவப்பட்டிருக்கின்றன. இதுபோன்று பல்வேறு விஷயங்கள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு அடல் சுரங்கப்பாதையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சுரங்கப்பாதையின் அகலம் 10.5 மீட்டர் ஆகும். இதில் பாதசாரிகளுக்கு இரு பக்கத்திலும் நடைமேடை அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை 1 மீட்டர் அளவைக் கொண்டிருக்கின்றன. இதன் வழியாக பயணித்தால் சுமார் 46 கிமீ வரை குறைக்க முடியும் என கூறப்படுகின்றது. எனவே இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மற்றும் நேரத்தை அதிகளவில் மிச்சப்படுத்த முடியும்.

இந்த தகவலை சுரங்கப்பாதையை கட்டமைத்த தலைமை பொறியியல் அதிகாரி புருசோத்தம்மன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய டன்னல் திட்டத்தின் இயக்குநர் பரிக்ஷித் மெஹ்ரா, வல்லுநர்கள் கருத்து உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "லே-வை இணைக்கும் முதல் படியாக இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இது உருவாக்குவது அவ்வளவு எளிதான விஷயமாக அமைந்திடவில்லை. பல இன்னல்களையும், தடைகளையும் சந்தித்தே கட்டமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மலைப் பாதையைக் காட்டிலும் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சுரங்க வழி பாதை மிகவும் பாதுகாப்பானதாகும். பொதுவாக மலைப் பாதை என்றாலே ஆபத்தானதுதான். அதிலும், லடாக்கிற்கு அழைத்துச் செல்லக் கூடிய மலைப் பாதை கூடுதல் ஆபத்தானது இருக்கின்றது. ஆம், இந்த மலைப் பாதை அதிக கொண்டை ஊசி வளைவு மற்றும் மிகவும் ஆபத்தான வழித்தடத்தைக் கொண்டது ஆகும்.

எனவேதான் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் புதிதாக சுரங்க வழிப் பாதை கட்டமைக்கப்பட்டது. மிக முக்கியமாக அதிகளவில் அரங்கேறும் விபத்தைக் குறைக்கும் நோக்கில் அடல் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையே விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக