இந்தியாவில் இந்த ஆண்டின் தொழில்வளர்ச்சி மிகுந்த
மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களின் தொழிற் வளர்ச்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதில் தொழில் செய்ய உகந்த மாநிலமாக தொடர்ந்து முதலிடத்தில் ஆந்திர பிரதேசம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் 12ம் இடத்தில் இருந்த உத்தர பிரதேசம் 2019ம் ஆண்டின் பட்டியலில் 2ம் இடத்தை அடைந்துள்ளது. அதை தொடர்ந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் முதல்வர் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்ட நிலையில் பட்டியலில் தமிழகம் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக