Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ஹூவாய் பி ஸ்மார்ட் 2021: விலை விவரங்கள்!

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன் டாப் சென்டர் பஞ்ச் ஹோல் கேமராவுடனான டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன் டாப் சென்டர் பஞ்ச் ஹோல் கேமராவுடனான டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

48 மெகாபிக்சல் குவாட் கேமரா

மேலும் ஹூவாய் பி ஸ்மார்ட் 2021, ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. அதோடு இதில் வேகமான சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஹூவாய் பி ஸ்மார்ட் 2020-இன் வாரிசாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய மதிப்பில் ரூ.18,214

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கையில். ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன் விலை 250 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,214 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021: அம்சங்கள்

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 165.65 x 76.88 x 9.26 மிமீ மற்றும் 206 கிராம் எடையைக் கொண்டுள்ளது. 6.67 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல் முழு எச்டி + தெளிவுத்திறன் மற்றும் 20: 9 விகிதத்துடன் வருகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. சாதனம் கூடுதல் சேமிப்பிற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. Android 10 ஆதரவில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. Google Apps போன்றவை இந்த சாதனத்தில் முன்பே நிறுவப்படவில்லை என தெரிகிறது. பி ஸ்மார்ட் 2021 ஹூவாய் தனது ஹூவாய் ஆப் கேலரி மற்றும் ஹூவாய் மொபைல் சேவைகளை வழங்கவுள்ளது.

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021: கேமரா

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் புற ஊதா சென்சார், 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் துளை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொண்டிருக்கிறது.

22.5W சூப்பர்சார்ஜிங் அம்சம்

ஹூவாய் பி ஸ்மார்ட் 2021 5,000 mAh பேட்டரி மற்றும் 22.5W சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஸ்மார்போன் பாதுகாப்பிற்கான கைரேகை சென்சார் கொண்டுள்ளது. ஹூவாய் பி ஸ்மார்ட 2021 கிடைக்கும் வண்ணங்கள் குறித்து பார்க்கையில் இது மிட்நைட் பிளாக், ஃப்ரஷ் கோல்ட் மற்றும் க்ரஷ் க்ரீன் வண்ணங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக