Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

களமிறங்கிய சோனி: எக்ஸ்பெரியா 5 II பல்வேறு அம்சங்களோடு அறிமுகம்!

சோனி எக்ஸ்பீரிய 5 II அறிமுகம்

சோனி எக்ஸ்பெரியா 5 II, நான்கு கேமரா அம்சத்தோடு, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.1 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே அம்சமும் இதில் உள்ளது. இதன் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரிய 5 II அறிமுகம்

சோனி நிறுவனம் சமீபத்தில் முதன்மையான எக்ஸ்பீரிய 5 II வெளியிட்டுள்ளது. இந்த சாதனமானது ஒரே வேரியண்ட் மற்றும் நான்கு வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த சாதனமானது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த எந்த விவரத்தையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் வருகிறது. சோனி எக்ஸ்பீரியா 5 II விலை குறித்து பார்க்கையில், இது ஐரோப்பாவில் 899 டாலர் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.78,000 ஆகும். அதேபோல் அமெரிக்காவில் தோராயமாக ரூ.70,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நான்கு வண்ண விருப்பங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது ஐரோப்பிய சந்தையில் கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அதேபோல் அமெரிக்காவில் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஸ்லோ மோஷன் மூவி ரெக்கார்டிங்

சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் எச்டிஆர் 120 எஃப்.பி.எஸ் ஸ்லோ மோஷன் மூவி ரெக்கார்டிங் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 6.1 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆதரவு

சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போனின் காட்சி 1080 x 2520 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 21: 9 விகித விகிதத்தைக் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் கொண்ட சாதனம் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 128 ஜிபி உள் சேமிப்பு உடன் வருகிறது. அதேபோல் மெமரி விரிவாக்கத்திற்கான ஸ்லாட் இதில் உள்ளது.

12 எம்பி முதன்மை சென்சார்

சோனி எக்ஸ்பீரியா 5 ஸ்மார்ட்போன் 12 எம்பி முதன்மை சென்சார், 12 எம்பி செகண்டரி லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் வருகிறது. அதேபோல் 8 எம்.பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. சாதனத்தின் மற்றொரு அம்சம் 4000W mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. 30 நிமிடத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக