Detel
நிறுவனம் இன்று தனது முதல் வாஷிங் மெஷின் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம்
செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாஷிங் மெஷினின் விலையைக் கேட்டால்
அனைவரும் மெய்சிலிர்த்தே போவார்கள், ஏனென்றால் இதன் விலையோ மிகவும் மலிவு.
முதல்முறையாக டிடெல் நிறுவனம் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிடெல்
செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்
டிடெல்
நிறுவனம் சமீபத்தில் அதன் ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்தது. அதனைத்
தொடர்ந்து தற்பொழுது டிடெல் நிறுவனம் வெறும் ரூ .5,999. என்ற விலையில் புதிய
செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய வாஷிங் மெஷினின் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து வெறும் ரூ.5,999
என்பது குறிப்பிடத்தக்கது.
செமி
ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்
இந்தியாவில்
உள்ள வாடிக்கையாளர்கள் இந்த புதிய செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வாங்க
விரும்பினால் நேரடியாக டிடெல் நிறுவனத்தின் Detel இந்தியா வலைத்தளத்திலிருந்து
இந்த சாதனத்தை வாங்க முடியும். அதேபோல், மறு விற்பனையாளர்கள் மற்றும் மொத்த
ஆர்டர்களுக்காக இந்த தயாரிப்பை வாங்க விரும்புவோர் B2Badda.com தளத்தின் வழியாக ஆர்டர்
செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேக்
இன் இந்தியா தயாரிப்பு
இந்நிறுவனம்
செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இந்திய
வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமையான இந்த
வாஷிங் மெஷின் சாதனம் மேக் இன் இந்தியா தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
இயந்திரம் இயங்கும்போது குறைந்த சத்தத்தையும் அதிர்வுகளையும் உருவாக்கும்படி
வடிவமைக்கப்பட்டுள்ளது.
5
ஆண்டு உத்தரவாதம்
டிடெல்
நிறுவனத்தின் இந்த சலவை இயந்திரம் 6.8 கிலோ எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஏசி /
50 ஹெர்ட்ஸ் 230v மின்சாரம் மூலம் இயங்குகிறது. வாஷிங் உள்ளீடு 360 W மற்றும்
அதனுடன் நூற்பு உள்ளீட்டு சக்தி 150 W ஆகும். நீர் மட்டத்தின் மிக உயர்ந்த திறன்
65 லிட்டர் மற்றும் குறைந்த நீர் திறன் 30 லிட்டர் ஆகும். வாஷர் எடுக்கும் மொத்த
நேரம் 15 நிமிடங்கள் மற்றும் ஸ்பின்னர் ஒட்டுமொத்தமாக 5 நிமிடங்கள் எடுக்கும்.
டிடெல் சலவை இயந்திரம் மோட்டார் மீது 5 ஆண்டு உத்தரவாதமும் 2 ஆண்டு விரிவான
உத்தரவாதமும் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக