ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை
வணிகப்பிரிவில் சில்வர் லேக் நிறுவனம் 7,500 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.இது
குறித்து வெளியான செய்தியில், சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல்
நிறுவனத்தின் 1.75% பங்குகளை, 7,500 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன்
ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இந்தியா நிறுவனமான
ரிலையன்ஸ் ரீடெய்ல் கால்பதித்து வருகிறது. ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில்
கொடிகட்டி பறந்து வந்தாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சமீபத்தில் தான் ஜியோமார்ட்
என்ற பெயரில் களமிறங்கியது ரிலையன்ஸ். சில்லறை வர்த்தகத்தில் நாடு முழுவதும்
12,0000 மேற்பட்ட சில்லறை கடைகள் ரிலையன்ஸூக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை
விரிவுபடுத்தும் விதமாக அண்மையில் பிக்பஜார் கடைகளையும் ரிலையன்ஸ் வாங்கியது. இந்த
நிலையில் தனது ஜியோமார்ட் வணிகத்தினை மேம்படுத்தும் பொருட்டு சர்வதேச
முதலீட்டாளர்களை ரிலையன்ஸ் நிறுவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சில்வர் லேக்
நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெயிலில் நிறுவனத்தில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய
உள்ளது.
சிலவர்
லேக் நிறுவனம் ஏற்கெனவே ரிலையன்ஸ் ஜியோவில் 2.08% பங்குகளை, 1.34 பில்லியன் டாலர்
முதலீடு செய்து வாங்கியது. இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள சில்வர்லேக்
நிறுவனத்தின் இணை சிஇஓ ஏகோன் துர்பன் (Egon durban), ரிலையன்ஸின் புதிய வர்த்தக
யுக்தி சில்லறை வர்த்தகத்தில் ஒரு புரட்சியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதே
இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவிக்கையில், சில்வர்
லேக் உடனான உறவு நீடிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,
சில்லறை வணிகத்தில் அதன் முதலீட்டால் முக்கியத்துவம் வாய்ந்த பங்குதாரராக சில்வர்
லேக் உருவாகி உள்ளதாகவும் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதற்கு
முன்னதாக பேஸ்புக் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸின் ஜியோவில்
முதலீடு செய்தன. இந்த நிலையில் தற்போது சில்லறை வர்த்தகத்தினை மேம்படுத்த
ரிலையன்ஸ் முயன்று வருவது, அமேசான் பிளிப்கார்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரும்
போட்டியாக உருவெடுக்கவும் இது வழிவகுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக