Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 செப்டம்பர், 2020

டெல் ஜி7 15 லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்!

RGB WASD கீபோர்டு

டெல் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெல் ஜி7 15 7500 லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிறந்த கேமிங் லேப்டாப் ஆக இந்த டெல் ஜி7 15 7500 மாடல் உள்ளது.

இந்த புதிய டெல் லேப்டாப் மாடலில் தனிப்பயனாக்கக்கூடிய RGB WASD கீபோர்டு ஆதரவு மற்றும் அதற்கு தகுந்த லைட்டிங் ஆதரவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் ஐ9ற்றும் என்விடியாவின் ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் கிராஃபிக் கார்டுடன் சமீபத்திய 10 வது ஜெனரல் இன்டெல் கோர் சிபியுக்களால் இயக்கப்படுகிறது.

மேலும் இது என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2060, 6 ஜிபி ஜிடிடிஆர் 6 மெமரி மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2070 மேக்ஸ்-கியூ டிசைன், 8 ஜிபி ஜிடிடிஆர் 6 மெமரி உள்ளிட்ட 2 கிராஃபிக் கார்டு விருப்பங்களைக் கொண்டுள்ளது.

கிடைக்கக்கூடிய இரண்டு செயலி விருப்பங்கள் 10 வது ஜெனரல் இன்டெல் கோர் i7-10750H ஹெக்ஸ் கோர்பிராசசர் (12 எம் கேச், 5.0 ஜிகாஹெர்ட்ஸ் வரை) மற்றும் 10 வது ஜெனரல் இன்டெல் கோர் i9-10885H ஆக்டா கோர் செயலி (16 எம் கேச், 5.3 ஜிகாஹெர்ட்ஸ் வரை).

இந்த லேப்டாப் மாடல் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 300nits பிரைட்நஸ் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் 300Hz refresh rate, 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பு வசதி, விண்டோஸ் 10 ஒஎஸ் உள்ளிட்ட வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1 எச்டிஎம்ஐ 2.0 போர்ட், 3 சூப்பர்ஸ்பீட் யூ.எஸ்.பி 3.2 ஜெனரல் 1 டைப்-ஏ போர்ட், மைக்ரோமீடியா கார்டு ஸ்லாட், ஹெட்போன்ஃ மைக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் புளூடூத் 5.1 மற்றும் வெப்கேம் கொண்ட 2 டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த அட்காசமான சாதனம்

இந்த புதிய லேப்டாப் மாடல் 86WHr, 6-செல் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 240 வாட் ஏசி அடாப்டருடன் வருகிறது. இந்த மாடலை வாங்குவதில் கூகிள் ஒன் சந்தாவுக்கு டெல் 3 மாத சோதனையை இலவசமாக வழங்குகிறது.

டெல் ஜி7 15 லேப்டாப் மாடல் பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல் பிரத்தியேக கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.1,61,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக