சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது Mi TV Lux 82-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 5ஜி ஆதரவு மற்றும் 8கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமியின் Mi TV Lux 82-inch Pro ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி
சியோமியின் Mi TV Lux 82-inch Pro ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 7680×4320 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, மேலும் 178டிகிரி கோணத்துடன் 2000 nits பிரைட்நஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. பின்பு MEMC தொழில்நுட்ப ஆதரவுடன் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது 82-இன்ச் ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக இந்த Mi TV Lux 82-inch Pro ஸ்மார்ட் டிவியில் Novatek 72685 குவாட்கோர் பிராசஸர் உடன் கார்டெக்ஸ் ஏ73 மற்றும் கார்டெக்ஸ் ஏ53 சிப்செட் ஆதரவும் உள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது MIUI இல் இயங்குகிறது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி குவாண்டம் டாட் தொழில்நுட்பம், மற்றும் டால்பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சியோமியின் Mi TV Lux 82-inch Pro ஒஎல்இடி ஸ்மார்ட் டிவியில் 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் 120Hz refresh rate வசதியை கொண்டுள்ளதால் இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சியோமியின் Mi TV Lux 82-inch Pro ஒஎல்இடி ஸ்மார்ட் டிவியில் வைஃபை, புளூடூத் 5.0 மற்றும் மூன்று எச்டிஎம்ஐ 2.1 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் டி.டி.எஸ்: ஆடியோ ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 8 ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது.
சியோமியின்Mi TV Lux 82-inch Pro ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி உடன் ஒரு 4கே 82-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்ட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் Mi TV Lux 82-Inch மற்றும் Mi TV Lux 82-Inch Pro என்று பெயரிடப்பட்டுள்ளது. முதலில் நாம் பார்த்த விவரக்குறிப்புகள் 8கே Mi TV Lux 82-inch Pro-சேர்ந்தது ஆகும். இப்போது 4கே (Mi TV Lux 4K 82-inch )ஸ்மார்ட் டிவியின் விவரக்குறிப்புகளைப் பார்ப்போம்
Mi TV Lux 4K 82-inch ஸ்மார்ட் டிவி
Mi TV Lux 4K 82-inch ஸ்மார்ட் டிவி ஆனது 3,840x2,160 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 178 டிகிரி கோணத்துடன் 10000nits பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் MEMC தொழில்நுட்ப ஆதரவுடன் டால்பி விஷன் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த 4கே ஸ்மார்ட் டிவியில் மீடியாடெக் எம்டி9650 குவாட்-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ் ஆதரவுடன் 6ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது. வைஃபை, புளூடூத் வி 5.0.எச்.டி.எம்.ஐ போர்ட்கள்,ஒரு ஏ.வி. போர்ட்,
இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், ஒரு ஆப்டிகல் ஃபைபர் போர்ட் மற்றும் நான்கு மைக் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
அட்டகாசமான விலை
சியோமியின் Mi TV Lux 4K 82-inch ஸ்மார்ட் டிவியின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.1,08,000-ஆக உள்ளது.
சியோமியின் Mi TV Lux 82-inch Proஸ்மார்ட் டிவியின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.5,41,000-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக