Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 23 செப்டம்பர், 2020

Air Travel தொடங்கினாலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் இப்போதைக்கு No Entry!!

 Indians may not be allowed to enter this country once air travel resumes  know why | Air Travel தொடங்கினாலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில்  இப்போதைக்கு No Entry!! | India News in Tamil

கொரோனா வைரஸ் உலகை இன்னும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. COVID-19 காரணமாக இந்திய பயணிகள் தென் ஆப்பிரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், தென் ஆப்பிரிக்கா (South Africa) அதன் லாக்டௌன் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அக்டோபர் 1 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்கவும் தயாராக உள்ளது.

எனினும், BRICS கூட்டமைப்பின் கூட்டாளி நாடுகளான இந்தியா மற்றும் பிரேசிலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்த படியாக கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா மற்றும் பிரேசிலில் உள்ளனர்.

ஆனால் இந்தியா மற்றும் பிரேசிலில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பது தென்னாப்பிரிக்காவை தூதாண்மை ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாக்கலாம் என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்தது.

" BRICS கூட்டாண்மை அடிப்படையில் இந்த நாடுகளுடன் வர்த்தக மற்றும் சுற்றுலா செயல்பாடுகளை தொடர்வதா அல்லது தூதாண்மை பிரச்சனைக்கான அபாயத்தை எதிர்கொண்டு இந்நாடுகளுக்கு கதவுகளை மூடுவதா?” என்பது தென் ஆப்பிரிக்க அரசின் முன் உள்ள மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ், பிற அரசாங்க அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, தென்னாப்பிரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலைத் தொகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வார தொடக்கத்தில் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைத் தவிர, இங்கிலாந்து மற்றும் பிரான்சும் இந்த பட்டியலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியல் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக