உங்களுக்கு
முன்கோபம் வருகிறதா? அதற்கு இவர் தான் காரணம் !!
இதுவரை ராசியில் நவகிரங்களான சூரியன் மற்றும் சந்திரன் இருந்தால் ஏற்படும் சுப
மற்றும் அசுப பலன்கள் யாவற்றையும் பார்த்தோம். இனி நவகிரகங்களில் நிலத்திற்கு
ஆதிபத்தியம் (ஆதிக்கம்) பெறும் செவ்வாய் கிரகம் பற்றி காண்போம்.
செவ்வாய் கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :
தந்தை : பரத்துவாஜர்
உகந்த நாள் : செவ்வாய்க்கிழமை
செவ்வாய் கிரகத்தின் பிரதி அதிபதி : முருகன்
செவ்வாய் கிரகத்தின் மனைவி : சக்தி தேவி
வசிக்கும் இடம் : ஆயுத சாலை
வலிமை உடைய பொழுது : இரவு
ராசியை கடக்கும் காலம் : 45 நாட்கள்
செவ்வாயின் நட்பு கிரகங்கள் : சூரியன், சந்திரன், குரு
செவ்வாயின் பகை கிரகங்கள் : புதன், சனி, ராகு, கேது
சமமான கிரகம் : சுக்கிரன்
செவ்வாயின் தசா காலங்கள் : 7 வருடங்கள்
செவ்வாயின் நட்சத்திரம் : மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
செவ்வாய் கிரகத்தின் குணங்கள் :
முன்கோபம், முரட்டு தனம், வீர விளையாட்டுகள் மீது ஆர்வம், வீரம், அவசரபுத்தி,
சூடான உடல் தேகம், நிதானமின்மை, ஆபத்தில் உள்ளோரை துணிச்சலுடன் காப்பாற்றுதல்,
ஆணவம் மற்றும் கர்வம்.
நாளை செவ்வாய் கிரகம் ஒவ்வொரு ராசி வீடுகளில் இருக்கும் போது அவரால் உண்டாகும் சுப
மற்றும் அசுப பலன்களை காண்போம்.
மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். தன் சொந்த வீட்டில் ஆட்சிப் பலம் பெறுகிறார்.
அதனால் அவரால் உண்டாகும் சுப மற்றும் மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
முன்கோபம் கொண்டவராகவும், எவருக்கும் அடிபணியாத குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
அலட்சிய தன்மையும், முரட்டு சுபாவத்தையும் கொண்டவர்கள்.
எச்செயலிலும் நிதானம் இன்றி எங்கும் எதிலும் அவசரம் உடையவர்கள்.
சிந்தித்து செயல்படாததால் இவர்களே இன்னல்களை தேடிக்கொள்வார்கள்.
கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாதவர்கள்.
வெற்றி பெறுவதே குறிக்கோளாய் கொண்டு முழு மூச்சாக செயல்படக்கூடியவர்கள்.
பொது நலத்திலும் சுயநலம் உடையவர்கள்.
தனது கருத்துகளுக்கே முதலிடம் கொடுப்பவர்கள்.
எதிலும் வித்தியாசமான கண்ணோட்டங்களை கொண்டவர்கள்.
அடிதடி, விதண்டாவாதத்தில் விருப்பம் உடையவர்கள்.
தனது கருத்து தவறானாலும் அதை சரி என வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்.
எங்கும் ஒரே மாதிரியாக இருப்பவர்கள். மற்றவர்களை பற்றி சிந்திக்காதவர்கள்.
யாருக்கும் பயப்படாதவர்கள். எதையும் நேரடியாக சந்திக்கக்கூடியவர்கள்.
எதிலும் முன்னோடியாக வசிக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.
புதன், 30 செப்டம்பர், 2020
மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்?
புதிய பொடியன்
புதன், செப்டம்பர் 30, 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக