Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 செப்டம்பர், 2020

அடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா?- இதை மட்டும் செய்தால் போதும்!

கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்கள் மற்றும் கூகுள் ஸ்லைடு

கூகுள் டாக்ஸ், ஸ்லைட்கள், ஷீட்கள் ஆகிய பயன்பாட்டில் டார்க் மோட் அம்சத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இந்த பயன்பாடுகளை அதிகம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது மிகவும் தேவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்க் மோட் பயன்முறை

டார்க் மோட் பயன்முறை தற்போது பல்வேறு செயலிகளிலும் பிரதான பயன்பாடாக இருந்து வருகிறது. டார்க் மோட் வசதி என்பது பேட்டரி சார்ஜை சேமசித்து வைக்கும். அதோடு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை குறைக்கும். தொடர்ந்து டிஸ்ப்ளே பார்க்கும் போது கண்களில் ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்படும் ஆனால் டார்க் மோட் பயன்படுத்தும்போது அது குறையும்.

கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்கள் மற்றும் கூகுள் ஸ்லைடு

இந்த நிலையில் கூகுள் சமீபத்தில் அதன் கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்கள் மற்றும் கூகுள் ஸ்லைடு ஆகிய பயன்பாடுகளில் டார்க் மோட் எனபில் செய்யும் புதிய அம்சத்தை உருவாக்கி இருக்கிறது. கூகுள் உருவாக்கியுள்ள இந்த அம்சத்தை எப்படி ஆக்டிவேட் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்ட் செயல்பாட்டு முறை

ஆண்ட்ராய்டில் கூகுள் டாக்ஸ், கூகுள் ஸ்லைடுகள் மற்றும் கூகுள் ஷீட்களில் டார்க் மோட் பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கையில், தற்போது இதை பயன்படுத்த முடியாது என்றாலும் விரைவில் இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பில் டார்க் அம்சத்தை முயற்சி செய்து பார்த்ததாகவும் அது பயன்முறை நன்றாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டார்க் மோட் பயன்படுத்தும் முறை

ஆண்ட்ராய்டு பயன்பாட்டு முறையில் கூகுள் டாக்ஸ், கூகுள் ஸ்லைடுகள் மற்றும் கூகுள் ஷீட்களில் டார்க் மோட் பயன்படுத்தும் முறைக் குறித்து பார்க்கலாம். இந்த குறிப்பிட்ட பயன்பாடுகளை ஓபன் செய்ய வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று புள்ளிகள் உள்ள ஐகானை கிளிக் செய்யவும், செட்டிங்களுக்கு சென்று அதில் தீம் பட்டனை தேர்வு செய்ய வேண்டும். அந்த பயன்பாட்டில் உள்ள டார்க் மோட் பயன்பாட்டை ஆக்டிவேட் செய்யலாம்.

சாதாரன பயன்பாட்டு முறை

அதேபோல் ஒரு பயன்பாட்டை டார்க் மோட் அம்சத்தில் பார்க்காமல் அதே உண்மை வடிவில் பார்ப்பதற்கான அம்சமும் இதில் இருக்கிறது. பயன்பாட்டுத் தேர்வை ஓபன் செய்து அதில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்து காட்சி பயன்பாட்டு முறையை மாற்றலாம்.

IOS கூகுள் டார்க் அம்சம்

IOS கூகுள் டார்க் அம்சத்தை தேர்வு செய்வதற்கு கூகுள் டாக்ஸ், ஸ்லைடுகள், ஷீட்டுகளை திறப்பதற்கு முன் சாதனத்தில் ஸ்மார்ட் இன்வெர்ட்டை இயக்க வேண்டும். பின் கூகுள் பயன்பாடுகளில் திறந்து டார்க் மோட் அம்சத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

அமைப்புகள் மற்றும் கன்ட்ரோல்

அமைப்புகள் மற்றும் கன்ட்ரோல் சென்டருக்கு சென்று அதை ஸ்கரால் செய்தவுடன் கட்டுபாடு ஷார்ட்கட்ஸ்களை ஓபன் செய்ய வேண்டும். பின் அக்சஸபிலிட்டி அணுகலை கிளிக் செய்யவும் அதில் அணுகல் ஷார்ட்கட் தேர்வு செய்து ஸ்மார்ட் இன்வெர்ட் அம்சத்தை கிளிக் செய்யவும்.

ஃபோர்ஸ் டார்க் மோட் வெப்

கூகுள் க்ரோம் பயன்பாட்டை திறக்கவும், பின் chrome: // flags / # enable-force-dark உள்ளிடவும் அதில் ஃபோர்ஸ் டார்க் மோட் வெப் கண்டென்ட் டிஸ்ஏபிள் முடக்கியிருக்கும் முறையை காட்டும், அதை எனபில் செய்து கூகுள் க்ரோமை மீண்டும் தொடங்கவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக