உலகில் பல்வேறு வகையான நிறுவனங்களை நாம் பார்க்கிறோம். அவர்கள்
வித்தியாசமான பெயர்கள் மற்றும் லோகோக்களை கொண்டுள்ளனர். சில நிறுவனங்களின் பெயர்களுக்கு
எந்த விதமான அர்த்தமும் இல்லாதது போல தோன்றும்.
எப்படி அவர்கள் இந்த பெயரை வைத்தனர் என்று எப்போதாவது நாம் சிந்தித்து இருப்போமா?.
ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட பெயரை வைக்க முக்கிய காரணம்
இருக்கும். அப்படியாக சில பிரபலமான நிறுவனங்கள் எதனால் அவர்களின் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட
பெயரை வைத்தனர் என்னும் கதையை இப்போது பார்ப்போம்.
25. 7 லெவன்
செவன் லெவன் என்பது அமெரிக்காவின் பிரபலமான ஒரு உணவகமாகும். 1946 ஆம் ஆண்டில்தான் இது தனது பெயரை யூ-டோட்டம் என்பதில் இருந்து செவன் லெவன் என மாற்றியது. அவரகளது கடையின் வேலை நேரம் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ஆகும். அதை குறிக்கவே கடையின் பெயர் செவன் லெவன் என மாற்றப்பட்டது.
24.நிண்டெண்டோ
நிண்டெண்டோ ஒரு வீடியோ கேம் நிறுவனமாகும். இது ஜப்பான் வார்த்தையான நிண்டெண்டோ என்பதையே தனது நிறுவனத்தின் பெயராக வைத்துள்ளது. அதன் பொருள் என்னவென்றால் ‘நிண்’ என்றால் ஒப்படைக்கப்பட்டது. ‘டெண் டோ” என்றால் சொர்க்கம். அதாவது சொர்க்கம் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதே அந்த வீடியோ கேம் நிறுவன பெயரின் அர்த்தமாகும்.
23.பெப்ஸி
உலக அளவில் அனைவரும் அறிந்த ஒரு குளிர்பான நிறுவனம்தான் பெப்ஸி. பெப்ஸி என்ற பெயரின் அர்த்தம் கொஞ்சம் மோசமானதாக தோன்றலாம். செரிமானத்திற்காக வயிற்றில் உண்டாகும் நொதியின் பெயரே பெப்ஸி ஆகும்.
22.அடாரி

அடாரி என்பது ஒரு ஜப்பானிய வீடியோ கேம் நிறுவனமாகும். இது ஜப்பானில் பாரம்பரியமாக விளையாடும் “கோ” என்னும் விளையாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும். கோ விளையாட்டில் எதிராளியின் துண்டுகள் ஆபத்தில் இருக்கும்போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. செஸ் விளையாட்டில் ராஜா ஆபத்தில் உள்ள போது “செக்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவது போல கோ வில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
21.நாபிஸ்கோ
![]()
நாபிஸ்கோ ஒரு அமெரிக்க பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாகும். இதன் பெயரை கேட்கும் போது எளிதாகவும் வேடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் பாரம்பரியமாக பிஸ்கட் செய்துவரும் தேசிய பிஸ்கட் நிறுவனம் (National Biscuit Company) என்பதன் சுருக்க வடிவம்தான் நாபிஸ்கா.
20.சோனி
![]()
உலக அளவில் அனைவராலும் அறியப்பட்ட நிறுவனம் சோனி, இதன் நிறுவன பெயரானது லத்தின் சொல்லான சோனஸ் என்பதில் இருந்து வந்தது. சோனஸ் என்பதற்கு ஒலி என்று பொருள். ஆரம்பத்தில் ஒலி சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்ததால் இந்த நிறுவனம் சோனி என பெயர் வைத்தது. மட்டுமின்றி மற்ற மொழியை சேர்ந்தவர்களுக்கும் அந்த பெயர் சொல்வதற்கு எளிதானதாக அமைந்தது.
19.அடிடாஸ்
![]()
அடிடாஸ் என்பது விளையாட்டு சார்ந்த பொருட்களை விற்கும் பிரபலமான நிறுவனமாகும். உண்மையில் இந்த நிறுவனத்தின் பெயரானது ஒரு நபரின் பெயராகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் “அடோல்ஃப் அடி டாஸ்லர்” என்பவரின் பெயரே சுருக்கி அடிடாஸ் என வைக்கப்பட்டது. அவரது சகோதரர் ருடால்ஃப் ரூடி டாஸ்லர் “ருடா” என்னும் ஷூ நிறுவனத்தை துவங்கினார். பின்னர் அது பூமா என பெயர் மாற்றப்பட்டது.
18.நோக்கியா

சர்வேதேச அழைப்பேசி நிறுவனமான நோக்கியா. ஆரம்பக்கட்டத்தில் பின்லாந்தில் உள்ள நோக்கியா என்னும் இடத்தில் மர கூழ் ஆலை மூலமே தனது தொழிலை துவங்கியது. எனவே அந்த நகரின் பெயரையே தனது நிறுவனத்திற்கு வைத்தது.
17.ஆர்பிஸ்
![]()
ஆர்பிஸ் என்பது வறுத்த மாட்டிறைச்சியை விற்கும் நிறுவனமாகும். பலர் ஆர்பிஸ் என்பதற்கு அர்த்தம் மாட்டிறைச்சி என நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையில்லை. அந்த நிறுவனத்தின் நிறுவனர்களான ராஃபெல் சகோதரர்களின் முதல் எழுத்தை கொண்டே ஆர்பிஸ் என்ற பெயர் உருவானது.
16.செகா
செகா என்பது ஜப்பானை சேர்ந்த ஒரு வீடியோ கேம் நிறுவனமாகும். ஆனால் இந்த நிறுவனம் முதலில் பின்பால் எனும் விளையாட்டை விளையாடும் கருவிகளை அமெரிக்க இராணுவ தளங்களுக்கு இறக்குமதி செய்தது.
15.ஷார்ப்
இந்த நிறுவனம் முதலில் கூர்மையான பென்சில்களை தயாரித்து வந்தது. அதனால் அதன் பெயர் ஷார்ப் என இருந்தது. ஆனால் காலப்போக்கில் இது மின் சாதனங்களை செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது.
14.ஸ்டார்பக்ஸ்
ஸ்டார்பக்ஸ் அமெரிக்காவை சேர்ந்த காபி நிறுவனமாகும். எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்திற்கான பெயரை வைப்பதற்காக புனைவு கதைகளை படிப்பதில்லை. ஆனால் ஸ்டார்பக்ஸ் அப்படி ஒரு விஷயத்தைதான் செய்தது. அது மொபி டிக் என்னும் புனைவு கதையில் வரும் ஸ்டார்பக்ஸ் என்னும் கதாபாத்திரத்தின் பெயரையே தனது நிறுவனத்திற்கு வைத்தது.
13.அடோப்
![]()
உலக அளவில் மக்கள் அறிந்த ஒரு மென்பொருள் நிறுவனம் அடோப். உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் மென்பொருளில் அடோப்பின் போட்டோஷாப் மென்பொருளும் ஒன்று ஆகும். இந்த நிறுவனத்தின் நிறுவனரான ஜான் வர்னக் கலிபோர்னியாவில் ஓடிய அடோப் க்ரீக் என்னும் ஆற்றின் பெயரை கொண்டு தனது நிறுவனத்திற்கு பெயரிட்டார்.
12.ரீபோக்
![]()
ரீபோக் என்பது ஒரு புகழ்பெற்ற காலணி நிறுவனத்தின் பெயராகும். ஆனால் அதற்கு முன்பே அது ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னாவில் வாழும் ஒரு வகை மான் இனத்தின் பெயராகும். தற்சமயம் அது சர்வதேச நிறுவனத்தின் பெயராக அடையாளம் காணப்படுகிறது.
11.கோகோ கோலா

கோகோ கோலா நமது வட்டாரத்தில் அதிகம் அறியப்பட்ட குளிர்பான நிறுவனத்தின் பெயராகும். இதன் பெயரானது கோகோ இலைகள் மற்றும் கோலா கொட்டைகள் ஆகிய இயற்கை பொருட்களின் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டன.
10.அமேசான்

அமேசான் என்ற பெயரை யாரும் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அமேசான் இணையவழி பொருட்களை விற்கும் ஈகாமர்ஸ் நிறுவனமாகும். இதன் லோகோவை பார்த்தால் இதன் பெயர் காரணம் விளங்கும். இதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் நீங்கள் தேடும் எதையும் இங்கு கண்டறியலாம் என்பதை தனது லோகோ வழியாக குறிக்கிறார். அதனால்தான் அந்த லோகோவில் ஒரு கோடு ஏ வில் இருந்து இசட்டிற்கு செல்கிறது.
09.விர்ஜின் ரெக்கார்ட்ஸ்
இந்த கதையை நம்புவது கொஞ்சம் கடினம் என்றாலும் உண்மையில் இந்த பெயரை பரிந்துரைத்தது அந்த நிறுவனரின் நண்பராவார். அவர்கள் வியாபாரத்தில் கன்னிதன்மையுடன் இருப்பதை குறிப்பதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டதாம்.
08.ஈ பே
![]()
ஈபே ஒரு ஆன்லைன் வர்த்தக தளமாகும். இது எக்கோ பே என்னும் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். ஆனால் அந்த பெயரில் ஏற்கனவே ஒரு சுரங்க நிறுவனம் தனது வலைத்தளத்தை வைத்திருந்ததால் அவர்கள் தங்கள் இணையத்தளம் பெயரை ஈபே என சுருக்கிக்கொண்டனர்.
07.சி.வி.எஸ் பார்மஸி
இந்த நிறுவனமானது முதலில் தனது பெயரை கண்ஷ்யூமர் வேல்யூ ஸ்டோர் என வைத்திருந்தது. பின்பு அதை சுருக்கி சி.வி.எஸ் பார்மஸி என வைத்தது. இந்த வார்த்தையானது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் சேவை மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என அதன் தலைமை நிர்வாகி ரியான் நினைத்தார்.
06.ஏ.எம்.சி தியேட்டர்
அமெரிக்கன் மல்டி சினிமாவை பொறுத்தவரை ஏ.எம்.சி தியேட்டர் அனைத்திற்கும் முன்னோடியாக உள்ளது.
05.வோக்ஸ் வாகன்
வோக்ஸ் வாகன் என்பது ஒரு கார் நிறுவனமாகும். இது ஒரு ஜெர்மானிய சொல்லாகும். வோக்ஸ் வாகன் என்பதற்கு மக்களின் கார் என்று பொருள்.
04.இக்யே
இதன் நிறுவனர் தனது சொந்த பெயரான இங்வார் கம்ப்ரேட் மற்றும் அந்த நிறுவனம் தோன்றிய இடமான எல்ம்டாரிட் அகுனாரிட் ஆகியவற்றை சுருக்கி இக்யே என தனது நிறுவனத்திற்கு பெயரிட்டார்.
03.வெண்டிஸ்
இந்த நிறுவனத்தின் நிறுவனரான டேவ் தாமஸ் தனது மகள் மெலிண்டாவின் புனை பெயரான வெண்டிஸ் என்பதையே நிறுவனத்திற்கு பெயராக வைத்தார்.
02.க்யா
இந்த வார்த்த ஹன்ஜா என்னும் மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்கு “ஆசியாவில் உதயமாகும்” என்று அர்த்தமாகும்.
01.லெகோ
இது ஒரு வீடியோ கேம் நிறுவனமாகும். லெகோ என்பது டேனிஷ் மொழியில் உள்ள லெக் கோட் என்னும் வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு நன்றாக விளையாடுங்கள் என்று அர்த்தம்.
![]() | ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() | ![]() | |||
![]() |
| ![]() |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக