Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

உலகிலேயே பெரிய ஏமாற்றம் எது தெரியுமா?.... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!!
-------------------------------------
மகன் : அப்பா எனக்கு சைக்கிள் வேணும்.
அப்பா : நீ சைக்கிள் உயரமா இருக்க?
மகன் : அப்போ பஸ் ஓட்டுறவரு பஸ் உயரமாவா இருக்காரு?
அப்பா : 😳😳
-------------------------------------
ராதா : நீயும், உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே... யாரு சாப்பாடு செய்யுறீங்க?
சீலா : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு... மறுநாள் என் மாமனாரு பண்ணுவாரு...
ராதா : 😂😂
-------------------------------------
குழந்தை : ஆண்ட்டி கழுத்தை அறுக்க வந்துட்டீங்களா?
வள்ளி : ஏன் பாப்பா இப்படி சொல்ற?
குழந்தை : ஒவ்வொரு தடவையும் நீங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் எங்க அம்மா இப்படிதான் சொல்லுவாங்க...
வள்ளி : 😠😠
-------------------------------------
ஆசிரியர் : உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்...
மாணவன் : சார்... அப்படீன்னா எனக்கு தமன்னாவ ஜோடியா போடுங்க...
ஆசிரியர் : 😡😡
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது. அது என்ன?

2. தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ. அது என்ன?

3. தோகைப்போல உடம்புக்காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி. அவள் யார்?

4. ஆயிரம் அறைகள் அரண்மனையில், ராணியின் ஆட்சி. அது என்ன?

5. நூல் நூற்கும் ராட்டை அல்ல, வலை பின்னும் மீன் பிடிக்க அல்ல. அது என்ன?

விடைகள் :

1. புகைப்படம்.

2. வாழைப்பூ.

3. துடைப்பம்.

4. தேன்கூடு.

5. சிலந்திப் பூச்சி.
-------------------------------------
இவர்களுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...!!
-------------------------------------
யார் குறை சொன்னாலும் அவருக்கு நன்றி சொல்லுங்கள்...

தன்னுடைய வேலையை விட்டுவிட்டு நம்மீது கவனம் வைத்து கண்டுபிடித்த அவருடைய கண்டுபிடிப்பிற்கு நன்றி சொல்ல வேண்டாமா?😌😌
-------------------------------------
மொக்கை ஜோக்ஸ்...!!
-------------------------------------
உலகிலேயே பெரிய ஏமாற்றம் எது தெரியுமா?....
.
.
.
.
.
செல்போன்ல ஜார்ஜ் போட்டுட்டு... ஸ்விட்ச் போடாம 2மணி நேரம் கழிச்சு போயி பாக்குறதுதான்...😆😆

மரண பீதி-னா என்னன்னு தெரியுமா?
.
.
.
.
.

Maths டீச்சர் நம்மள நீ வந்துதான் இந்த கணக்கை Slove பண்ணனும்னு சொல்லுவாங்களே அதான்...😩😩

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக