Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வீட்டுக் கடன் - கம்மி வட்டிக்கு கொடுக்கும் வங்கிகள்!

 low interest home loans: Home Loan: குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கும்  வங்கிகளின் லிஸ்ட் - here is a list of banks offering home loan for lowest  interest rate | Samayam Tamil

மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகளை பற்றி பார்க்கலாம்.

சொந்த வீடு வாங்குவது பலருக்கும் கனவாக இருக்கலாம். சொந்த வீடு கனவை நிறைவேற்ற பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றில் வீட்டுக் கடனையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர்.

ஒரு நபர் பெறும் கடன்களிலேயே வீட்டுக் கடன்தான் மிகப்பெரியதாக இருக்கும். கடன் தொகையிலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்திலும் வீட்டுக் கடனின் அளவு மிகப்பெரியது. வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பொதுவாக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

இப்படிப்பட்ட சூழலில், குறந்த வட்டியில் வீட்டுக் கடன் பெற வேண்டியது முக்கியது. இதை பற்றி அறிந்துகொள்ள, வங்கிகள் என்ன வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு அவற்றை ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும். நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது நீங்கள் ஈசியாக கடன் பெற பேருதவியாக இருக்கும்.


இப்போது, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகளின் பட்டியலை பார்க்கலாம்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 6.70-7.15%

பேங்க் ஆஃப் இந்தியா : 6.85-8.35%

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா : 6.85-9.05%

பஞ்சாப் & சிந்த் பேங்க் : 6.90-7.25%

கனரா பேங்க் : 6.90-9.40%

ஹெச்டிஎஃப்சி பேங்க் : 6.95-7.85%

ஐசிஐசிஐ பேங்க் : 6.95-8.05%

நைனிடால் பேங்க் : 7-7.25%

எஸ்பிஐ : 7-7.85%

பேங்க் ஆஃப் பரோடா : 7-8.85%

இந்தியன் பேங்க் : 7-9%

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் : 7.05-7.30%

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா : 7.05-8.45%

பஞ்சாப் நேஷனல் பேங்க் : 7.10-7.90%

ஜம்மூ காஷ்மீர் பேங்க் : 7.20-7.60%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக