
கேரளாவில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அபதூறாகவும் பேசி வந்த பிரபல யூட்யூபருக்கு பெண்கள் கரி ஆயிலை பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தலைநகர்
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஜய் நாயர். யூட்யூப் சேனல் நடத்தி வரும் இவர்
சபரிமலை விவகாரத்தில் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது
சேனலில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதுகுறித்து பெண்ணிய செயல்பாட்டாளர்கள்
சிலர் சைபர்க்ரைம் போலீஸாரிடம் புகாரும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் நாயர் சபரிமலை செல்ல முயன்ற டப்பிங் கலைஞர்
பாக்கியலட்சுமி என்பவர் குறித்து ஆபாசமாக திட்டி பதிவிட்டுள்ளார். இதனால்
பாக்கியலட்சுமி தலைமையில் விஜய் நாயர் வீட்டிற்கு சென்ற பெண்கள் சிலர் விஜய் நாயர்
அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார். இதனால் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த
கரி ஆயிலை அவர் மீது ஊற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பிறகு அவர் தான் இனி
ஆபாசமாக பேசமாட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அவதூறாக பேசிய
யூட்யூபரை வீட்டிற்கே சென்று பெண்கள் குழு கரி ஆயில் அபிசேகம் செய்த சம்பவம்
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக