Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 26 செப்டம்பர், 2020

மகர ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனியிடம் சந்திரன் சமம் என்ற நிலையில் இருந்து அளிக்க இயலும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

 செயல்பாடுகளை அறிந்து கொள்வது என்பது சற்று சிரமமாகும்.

 பேச்சைக் குறைத்து காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடியவர்கள்.

 மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.

 ரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

 சிலர் சிறப்பு பதவிகளும், பரிசுகளும் பெறுவார்கள்.

 பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பதில் சற்று தயக்கம் கொண்டவர்கள்.

 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இதனால் தாயா? தாரமா? என்ற தடுமாற்றம் உண்டாகும்.

 உறவினர்கள் அதிகம் இருப்பின் அவர்கள் மூலம் இன்னல்கள் உண்டாகும்.

 நிலையற்ற மனமும், செயல்பாடும் உடையவர்கள்.

 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

 எதற்கும் பயம் கொள்ளாத சற்று இறுகலான நெஞ்சம் கொண்டவர்கள்.

 பொறுப்புகள் வகிக்காமல் இன்பம் மட்டும் அனுபவிக்க கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!