Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 23 செப்டம்பர், 2020

வீடு தேடி வரும் சியோமி ஸ்டோர்.. புதுப்புது ஐடியாவுடன் சீன நிறுவனம்..!

 வீடு தேடி வரும் சியோமி ஸ்டோர்.. புதுப்புது ஐடியாவுடன் சீன நிறுவனம்..! |  Xiaomi's New idea: Mi Store Experience on Wheels to customers - Tamil  Goodreturns

இந்தியா சீனா இடையில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், நம் நாட்டில் இருக்கும் சீன நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தக விரிவாக்கம் செய்து வருகிறது. அதுவும் குறிப்பாகச் சியோமி கடந்த சில மாதங்களாக இழந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகப் புதுப்புது ஐடியா உடன் களத்தில் இறங்கியுள்ளது.

இந்திய சீன எல்லையில் சீன ராணுவ தாக்குதலால் இந்திய ராணவ வீரர்கள் மரணம் அடைந்தனர், அப்போது இந்தியாவில் சீன பொருட்களுக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவியது, இக்காலகட்டத்தில் சியோமி தனது MI பெயரை Made in Indiaவாக மாற்றி மக்களிடம் நற்பெயரைப் பெற முயற்சி செய்தது..

சீன பொருட்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சியோமி ஆன்லைன் வர்த்தகத்தை மட்டும் நம்பியிருக்காமல் ரீடைல் வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த துவங்கியுள்ளது. குறிப்பாகச் சிறு கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளைக் குறிவைத்து சியோமி பல்வேறு விளம்பரம் மற்றும் விற்பனை சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி விற்பனை பிரிவில் முன்னோடியாக இருக்கும் சியோமி, சீன பொருட்களுக்கு எதிரான மனநிலையை மாற்ற வேண்டும் என நேரடியாக மக்கள் மத்தியில் தனது பொருட்களையும், பிராண்டுகளையும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்தியாவில் பல டவுன் மற்றும் சிற நிகரங்களில் 'Mi Store on Wheels' பெயரில் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஷோரூம் அனுபவத்தைக் கொடுக்க

Mi Store on Wheels திட்டம்

இத்திட்டம் முதல் முறையாகச் சட்டீஸ்கர் மாநிலத்தில் பன்சா முதல் சன்கரா வரையிலும், பாவார்பூர் முதல் பிதோரா வரையிலும் மினி சரக்கு வேனில் சியோமி ஷோரூம் போலவே கடையை அமைத்து மக்களுக்கு ஷோரூம் அனுபவத்தை மக்கள் முன்னே கொண்டு சென்றுள்ளது சியோமி.

இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முறையான பாதுகாப்புகளுடன் பணியாற்றுவதாகவும், வாடிக்கையாளர்களும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து வருவதாகவும் சியோமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சியோமி இந்தியா தெரிவித்துள்ளது.

ரெட்மி

இப்புதிய Mi Store on Wheels திட்டத்தின் வாயிலாகச் சியோமி தனது புதிய 9 சீரியஸ் மாடல் போன்களை மக்கள் முன்னிலையில் நேரடியாக அறிமுகம் செய்து விற்பனை செய்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து பிற மாநிலங்களுக்கு இத்திட்டம் கொண்டு செல்ல சியோமி ஆலோசனை செய்வதாகத் தெரிகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்டுப் பகிரப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

கிளைகள்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி விற்பனையில் முதன்மை நிறுவனமாக இருக்கும் சியோமி நாடு முழுவதும் 75 Mi ஹோம்ஸ், 45 Mi ஸ்டூடியோஸ், 8000 Mi Preferred Partners மற்றும் 4,000 ரீடைல் பார்ட்னர்களையும், 3,000 Mi ஸ்டோர்ஸ்-ம் கொண்டு தனது விற்பனை தளத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக