Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 24 செப்டம்பர், 2020

மன்னிப்பு

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் ஒரு நாள் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த ராஜூ, தலைவரைப் பார்த்து என்ன கழுதை உடன் நடைப்பயிற்சி போய்க்கொண்டிருக்கிறீர்கள்? என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

இது என்னுடைய நாய். உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? என்றார். அதற்கு ராஜூ அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம் என்றார். சிறிது நேரம் கழித்து தலைவருக்கு தன்னைத்தான் கழுதை என்று ராஜூ சொல்கிறார் என்பது புத்திக்கு எட்டியது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில், ராஜூ தன்னை கழுதை என்று சொல்லியதை எண்ணி வெகுண்டு எழுந்தார்.

ராஜூவின் மீது தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜூ ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு. ஆகையால் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். ராஜூ நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா என்றார். நீதிபதி கேளுங்கள் என்றார். ஐயா சட்டத்தில் நான் கழுதையை தலைவா என்றழைப்பதில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா? என்று கேட்டார்.

இல்லை என்றார் நீதிபதி. சரி என்ற ராஜூ அந்தத் தலைவரிடம் சென்று தலைவா என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!