-------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------
ராஜு : உங்க நகைச்சுவை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்குது சார்.
பாபு : அட, அப்படியா?
ராஜு : ஆமா சார்... முதல்ல சிரிச்சுடறோம், அப்புறம்தான் ஏன் சிரிச்சோம்னு சிந்திக்கிறோம்.
பாபு : 😏😏
-------------------------------------------------------
ஆசிரியர் : எல்லோரும் நொண்டிக் கொக்குன்னு எழுதுங்க...
மாணவன் : சரிங்க சார்...
ஆசிரியர் : என்னடா கெக்கு-ன்னு எழுதியிருக்கிற?.. அது கொக்குடா மக்கு..
மாணவன் : நீங்க தானே நொண்டிக் கொக்கு-ன்னு சொன்னீங்க... அதான் காலை எடுத்துட்டேன்...
ஆசிரியர் : 😠😠
-------------------------------------------------------
சீனு : கரண்டி ரொம்ப வெயிட்டுன்னு கடையில வாங்கும்போது தெரியாது...
தீபக் : எப்படி சொல்ற?
சீனு : வீட்டுல வாங்கும்போதுதான் தெரியுது...
தீபக் : 😝😝
-------------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே...
-------------------------------------------------------
பெண்கள் திருமணத்திற்கு முன் செல்வி...
திருமணத்திற்கு பின் திருமதி...
ஆண்கள் திருமணத்திற்கு முன் திரு...
திருமணத்திற்கு பின் திருதிரு...😂😂
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...
மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்...😂😂
-------------------------------------------------------
இன்றைய கடி...
-------------------------------------------------------
மொபைல் மூலமா பணம் சம்பாதிக்கலாம்... எப்படி தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
மொபைல வித்துட வேண்டியதுதான்...😁😁
-------------------------------------------------------
நிதர்சனமான உண்மை...!!
-------------------------------------------------------
இந்த உலகில் மனிதனுக்கான கடைசி சம்பளம்...
ஒரு ரூபாய் மட்டுமே...!!
-------------------------------------------------------
இப்படி மட்டும் பேசிவிடாதீர்கள்...!!
-------------------------------------------------------
⭐ கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்...
⭐ அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்...
⭐ வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்...
⭐ வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்...
⭐ ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்...
⭐ பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக