கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர்.
ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்தது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டனர். பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொண்டார்கள் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாடு. தண்ணீர் இல்லமால் கூட அதிக நேரம் இந்த பப்ஜி விளையாட்டில் தான் இருக்கின்றனர். குறிப்பாக உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்து விளையாடுகின்றனர்..
இந்நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலேயே மூட்டைக்கட்டிய 20வயதான கன்னியாகுமரி மாணவி ஒருவர் தன்னுடன் பப்ஜி விளையாடிய இளைஞர் மீது கொண்ட காதலால் திருவாரூருக்கு தேடிச்சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதன்படி திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்த மரவியாபாரி சசிகுமாரின் இளைய மகள் பிபஷா(20),
இவர் திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். பப்ஜி விளையாட்டில் மூழ்கியதால் கல்வியை பாதியிலேயே மூட்டைகட்டும் நிலைக்கு தள்ளப்பாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி பபிஷா திடீரென மாயமானார், இது தொடர்பாக திருவட்டார்
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்பு மாயமான பவிஷாவை தேடிவந்தனர்.
அப்போது கழுத்தில் மாலையுடன் திருவட்டார் காவல் நிலையத்திற்கு வந்த பவிஷா
திரூவாரூரை சேர்ந்த பப்ஜி காதல் அஜின் பிரின்ஸ் என்பரை திருமணம் செய்து கொணடாதாக
கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது என்னவென்றால் பப்ஜி விளையாட்டின் போது வெற்றியை நோக்கி தன்னை
பத்திரமான அழைத்துச்சென்ற வழிகாட்டியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 24வயதான
அஜின் பிரின்ஸ் உடன் காதல் மலர்ந்ததாகவும், அவரையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்
கொண்டதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக
ஊரடங்கு காலத்தில் சேர முடியாமல் தவித்த நிலையில் கடந்த 19-ம் தேதி தன்னை தேடி
காரில் வந்த காதலன் அஜின் பிரின்ஸுடன் சென்று விட்டதாகவும், தங்களது காதலுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு தரவேண்டும் எனவும்
கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தற்போது இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் இரு குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூறி சமரசம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்தனர். பின்பு இருவரும் அருகிலுள்ள ஆலயத்தில் மாலைமாற்றி முறைப்படி திருமணமும் செய்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக