Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு!

 சாம்சங் பட்ஜெட் விலை செல்போன்! ரூ.17 ஆயிரத்திற்கு அட்டகாசமான மாடல் அறிமுகம்!
மேற்குவங்க மாநிலத்தில் ஸ்வீட் கடை ஒன்றில் வைத்து நபர் ஒருவர் அவரது ரூ.45,000 மதிப்பிலான செல்போனை தொலைத்துள்ளார். திருடிய நபரே அவருக்கு உரிமையாரிடம் செல்போனை திரும்பக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது
தொடரும் செல்போன் திருட்டுகள்
செல்போன் திருட்டு என்பது சராசரி நிகழ்வாக மாறும்வகையில் திருட்டுச் சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது.
செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம்
பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.
சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்
செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவலும் புகைப்படம் என அனைத்தும் உட்பட வங்கி கணக்கு முதல் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது.
ரூ.45,000 மதிப்பிலான செல்போன்
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் ஜமால்பூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வைத்து நபர் ஒருவர் அவரது ரூ.45,000 மதிப்பிலான செல்போனை தொலைத்துள்ளார். மாற்று இடத்துக்கு சென்றநபர் செல்போன் இல்லை என தேடிப்பார்த்து காணவில்லை என்று தெரிந்ததும். மீண்டும் அந்த கடைக்கு சென்று தேடிபார்த்துள்ளார்.
போலீஸில் புகார்
தனது மொபைல் போன் திருட்டுப்போனது என அறிந்த அந்த நபர், போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பின் தனது மொபைல்போனுக்கு தொடர்ந்து போன் செய்துள்ளார், ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே அந்த போன் இருந்துள்ளது.
திருடிய நபரே போன் அட்டன்ட் செய்து பேசினார்
செல்போன் தொலைத்த அந்த நபர் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். திடீரென அவரது எண்ணுக்கு ரிங் போகியுள்ளது தொடர்ந்து திருடிய நபரே போன் எடுத்து சார், இந்த மொபைல்போனை தங்களிடமே கொடுத்து விடுகிறேன் எனவும் இந்த மொபைலை தனக்கு சரிவர பயன்படுத்த முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
மொபைலின் உரிமையாளர் அதிர்ச்சி
இந்த பதிலை கேட்டதும் மொபைலின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து, போலீஸாரை தொடர்பு கொண்டு அவர்களது உதவியுடன் செல்போன் திருடிச் சென்ற நபரின் வீட்டுக்கு சென்று போனை வாங்கியுள்ளார். செல்போனை திருடிய நபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் என உரிமையாளர் கூறினார். திருடிய செல்போனை திரும்பக் கொடுத்ததால் அந்த நபர் மீது வழக்கும் எதுவும் பதிவு செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக