Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

எல்ஜி கொண்டுவரும் புதிய வசதி: சிம் இல்லாமல் கூட தொலைபேசியை பயன்படுத்தலாம்.! எப்படி?


புதிதாக இன்னொரு
இப்போது வெளிவரும் அனைத்து தொழில்நுட்பங்களும் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இப்போது உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதில் இருக்கும் செயலிகள் நமது வேலையை மிகவும் சுலபமாக்கிவிடுகின்றன.
அதன்படி இப்போது புதிதாக இன்னொரு தொழில்நுட்பமும் வரப்போகிறது. தென்கொரியாவின் மிகப் பெரிய மொபைல் கேரியரான எல்ஜி அப்ளஸ் (LG Uplus) சிம் இல்லாமல் இயங்கக்கூடிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்நிறுவனம் கூறுகையில், அதன் உலகளாவிய கூட்டாளர்களுடன் மேம்பட்ட செல்லுலார் தொகுதி இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. எனவே இதை பயன்படுத்த சிம் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செல்லுலார் சிப்செட் தயாரிப்பாளர் சோனி செமிகண்டக்டர் இஸ்ரேல் உள்ளூர் தகவல் தொடர்பு தயாரிப்பாளரர் என்டெமோர் மற்றும் ஜெர்மன் டிஜிட்டல் பாதுகாப்பு, தீர்வு வழங்குநர் கீசெக் டிவியன்ட் ஆகியோரின் உதவியுடன் எல்ஜி அப்ளஸ் ஆனது ஒரு சரிபார்க்கப்பட்டஒருகிணைந்த யுனிவர்சல் ஒருங்கிணைந்த சர்க்யூட் கார்டு (IUICC) தீர்வுகளை உருவாக்கியுள்ளது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிம் கார்டு பயனரின் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பதும், அவர்களின் சேவையையும்,சலுகைகளையும் அடையாளம் காண உதவுகிறது. பின்பு IUICC தொழில்நுட்பத்தில், சிம் ஒரு தகவல் தொடர்பு சிப்பின் வேலையைச் செய்யும், இது குரல் மற்றும் தரவு இணைப்பு சேவையை வழங்க உள்ளது.
குறிப்பாக சிம் கார்டுக்கு இடம் அல்லது கூடுதல் கூறுகள் தேவையில்லை என்பதால் சாதன உற்பத்தியாளர்களுக்கு சிறிய தயாரிப்புகளை தயாரிக்க சமீபத்திய தொழில்நுட்பம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
பின்பு உற்பத்தி செலவுகளை குறைக்க நிறுவனங்களை அனுமதிக்கும் என்றும் எல்ஜி அப்ளஸ் தெரிவித்துள்ளது. எல்ஜி அப்லஸ் IUICC தொழில்நுட்பத்தை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) தயாரிப்புகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதுவும் கண்காணப்பு சாதனங்கள் மற்றும் வெளிப்புற ஆய்வு சாதனங்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக