Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

Apple Time Flies நிகழ்வில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்! புதிய ஆப்பிள் சாதனங்களின் லிஸ்ட் இது தான்!


இந்த ஆண்டின் ஆப்பிள் நிகழ்ச்சி எப்பொழுது?
Apple நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் ஐபேட் போன்ற புதிய சாதனங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் வேறுபட்டதல்ல, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' என்ற பெயரில் முழுமையான டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம்.
இந்த ஆண்டின் ஆப்பிள் நிகழ்ச்சி எப்பொழுது?
கொரோனா தொற்று நிலைமை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக ஐபோன்கள் சில வார தாமதத்தைச் சந்திக்கும் என்று ஆப்பிள் சமீபத்தில் அறிவித்திருந்தது. இது செப்டம்பர் 15 நிகழ்விலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு இப்போது நம்மை அழைத்துச் செல்கிறது. புதிய ஆப்பிள் ஐபாட் ஏர் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற அறிமுகத்தை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.
ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்'
ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி, இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம்ஸ் நேரத்தின்படி இரவு 10:30 மணிக்கு யூடியூ வழியாக நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு விலை பிரிவின் கீழ் புதிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஐபாட் ஏர் அறிமுகம் செய்யப்படும். அதேபோல், ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடலின் கீழ் மூன்று மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, சிறந்த இரத்த ஆக்ஸிஜன் மானிட்டர், வேகமான வைஃபை இணைப்பு மற்றும் சிறந்த செயலி மற்றும் மேம்பட்ட ஸ்லீப் கண்காணிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் இம்முறையும் அதன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த ஆண்டு ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சின் மலிவான மாடலையும் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 6 தொடரில் ரூ.15,000 என்ற விலையில் ஒரு மாடலும் ரூ.30,000 விலையில் ஒரு மாடலும் அறிமுகம் செய்யப்படும்.
ஆப்பிள் ஐபாட் ஏர் 4
புதிய ஐபாட் ஏர் 4 கடந்த சில வாரங்களில் பல முறை வலைத்தளத்தில் வலம்வந்துள்ளது. இந்த நிகழ்வின் போது ஐபாட் ஏர் 4 சாதனம் முழு திரை டிஸ்பிளேயுடன், வேகமான செயலி மற்றும் யூ.எஸ்.பி-சி இணைப்பு ஆகியவற்றுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, ஐபாட் ஏர் 4 முதல் முறையாகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பவர் பட்டனுடன் கூட டச்ஐடி பட்டனை ஒருங்கிணைத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 12
ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 12, ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ், ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற நான்கு மாடல்களை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் டிஸ்பிளே விபரம்
ஆப்பிள் ஐபோன் 12 சாதனம் 5.4 இன்ச் OLED டிஸ்ப்ளேயுடன் வெளிவரும். ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ் மாடல் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்றும், ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் ஓஎல்இடி பேனலுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆப்பிள் A14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 கேமரா விபரம்
ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மேக்ஸ் இரட்டை கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகியவை மூன்று கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
போனுடன் இன்-பாக்ஸ் சார்ஜர் இல்லையா?
ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் 3D கேமராவுடன் லிடார் ஸ்கேனருடன் வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறையே ஐபோன் 12 மாடல்கள் இன்-பாக்ஸ் சார்ஜருடன் வராது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக