Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அதே துப்பட்டா... அடுத்தடுத்து தற்கொலை..! கொரோனா விட்டாலும் விடாத பிரச்சினை...

சென்னை அருகே கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர்கள் மணிகண்டன் (35), ராதிகா (29) தம்பதி. மயிலாடுபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் ராதிகாவுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. வேலை நிமித்தம் காரணமாக இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் குடியேறினர். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், ராதிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் சில நாட்கள் கழித்து பெரும்பாக்கத்தில் தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்திற்கு மீண்டும் செல்ல தொடங்கியுள்ளார்.


அன்றுகூட கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கம்பெனியில் இருந்துகொண்டு ராதிகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் மணிகண்டன். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களை தொடர்பு கொண்ட மணிகண்டன், தனது அழைப்பை ஏற்குமாறு ராதிகாவிடம் கூறுமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, அக்கம்பக்கத்தினர், மணிகண்டனின் வீட்டருகே சென்று பார்த்தபோது, ராதிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அதுகுறித்து மணிகண்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த மணிகண்டன், மனைவி பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராதிகாவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மனைவியின் மரணத்தால் விரக்தியில் இருந்து வந்த மணிகண்டன், ராதிகா தற்கொலை செய்துகொண்ட அதே மின்விசிறியில், அதே துப்பட்டாவை கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது இரண்டு மரண வழக்காக பதிவு செய்துள்ள போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக