Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

ட்ரம்புக்கு விஷ கடிதம் அனுப்பிய பெண் கைது! – அமெரிக்காவில் பரபரப்பு!

 


அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது. வழக்கமான சோதனையின்போது கடிதத்தில் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்திய உளவுத்துறை கனடாவை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளது. அந்த பெண் எதற்காக விஷம் தடவிய கடிதத்தை அனுப்பினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு கனடா பெண் விஷ கடிதம் அனுப்பியதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக