Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

முருங்கை இலைச்சாற்றில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?


Drumstick Leaf Juice
 

100 கிராம் முருங்கை இலையில், ஒரு ஆரஞ்சு பழத்தை விட ஏழு மடங்கு விட்டமின் சி-யும், பாலில் உள்ளதை விட 4 மடங்கு கால்சியமும், கேரட்டில் உள்ளதை விட 4 மடங்கு வைட்டமின் ஏ-வும், வாழைப் பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு பொட்டாசியமும், முருங்கை இலையில் உள்ளது.

 

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய இஞ்சித்துண்டுடன் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு  தண்ணீர் ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாற்றினை நாம் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

இந்த சாற்றில் சிறிதளவு சுத்தமான தேனை கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். இந்த முருங்கை இலை சாற்றை நாம் தினந்தோறும்  குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 15 மில்லி முருங்கை சாற்றை குடித்து வந்தால், ரத்த அழுத்தம் சீராகும். முருங்கை இலையில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும்  சத்துக்கள் அதிகம் நிறைந்தனால், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருகையில் ஒரே மாதத்தில் உங்கள் உடலில் உள்ள அனைத்து  கொழுப்புகளையும் கரைத்து உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

 

முருங்கை இலையில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, இதயத்திற்கு செல்லும் ரத்த  ஓட்டத்தை சீர்படுத்துகிறது.

 

இயற்கையாகவே இதற்கு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தேன் கலக்காமல் இந்த இலைச்சாற்றை தினமும் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், உடலின் சர்க்கரையின் அளவை சீர்படுத்தி நிரந்தரமாக நீரிழிவு நோயிலிருந்து நம்மை மீட்டெடுக்கும்.

 

முருங்கை இலையில் புரதம், இரும்புச் சத்து, கால்சியம், போன்றவற்றை அதிகமாக உள்ளதால், பெண்களின் இடுப்பு எலும்பை வலுப்படுத்தி மாதவிடாய் நேரத்தில்  இடுப்பு வலி மற்றும் வயிற்று வலிக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க, இந்த முருங்கை இலைச்சாறு பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக