சவுண்ட்கோர் பை ஆன்கர் நிறுவனம் இந்தியாவில் லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் மாடல் ஆனது புதிய தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் ஆனது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த இயர்போன் யுஎஸ்பி சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5 மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் குறைந்த எடை கொண்டிருக்கும் புதிய வயர்லெஸ் இயர்போன் சிலிகான் நெக்பேண்ட் மற்றும் டைட்டானியம் அலாய் ஸ்டீல் கோர் வழங்கப்பட்டு இருக்கிறது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் இந்த இயர்போன் 10 என்எம் ஒவர்சைஸ் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது. பின்பு இது ஆடியோ அனுபவத்தை மிகவும் துல்லியமபன கிளாரிட்டி மற்றும் பேஸ் வழங்கும் என சவுண்ட்கோர் தெரிவித்து உள்ளது.
இந்த புதிய இயர்போன் மாடல் ஐபிஎக்ஸ்7 சான்று பெற்று இருக்கிறது. இதனுடன் சிவிசி 8.0 நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சாதனம் ப்ளூடூத் 5.0 வசதியுடன் வரும் இந்த இயர்போன் 20 மீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. பின்பு இதில் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை இணைக்கும் தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த புதிய இயர்போன் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24மணி நேர பேக்கப் வழங்குகிறது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்தியாவில் சவுண்ட்கோர் லைஃப் யு2 ப்ளூடூத் மாடல் விலை ரூ.2899-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில்விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக