-----------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------
மனைவி : என்னங்க... துணியெல்லாம் ரொம்ப வெள்ளையா இருக்கு?...
கணவன் : துணியை துவைக்கும் போது யார் மேல அதிகமா கோபம் இருக்கோ அவங்கள நினைச்சு
துவைப்பேன்..
மனைவி : யார்மேல உங்களுக்கு அவ்ளோ கோபம்?
கணவன் : வேற யாரு? உன்மேலதான்...
மனைவி : ஹலோ... 108-ஆ?
கணவன் : 😳😳
-----------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-----------------------------------------
🔆 அதிக
நேரம் இருக்காது அதிர்ஷ்டம்...
🔆 நீண்ட தூரம் வராது சிபாரிசு...
🔆 எல்லா பொழுதும் கிடைக்காது உதவி...
🔆 எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை...
-----------------------------------------
யார் காரணம்?
-----------------------------------------
🌟 வாழ்க்கையில் நாம் சந்தித்தவர்களில்
🌟 சிலர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்...
🌟 சிலர் நம்மை சோதித்து இருப்பார்கள்...
🌟 சிலர் நம்மை பயன்படுத்தி இருப்பார்கள்...
🌟 சிலர் நமக்கு பாடம் கற்றுக்கொடுத்திருப்பார்கள்...
🌟 ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
🌟 அவர்கள் தான் நாம் சிறந்த மனிதர்களாக மாற காரணமாக இருந்திருப்பார்கள்...
-----------------------------------------
முடியும்... சிறந்த வரிகள்...!!
-----------------------------------------
👉 முடியும் என்ற சொல்...
👉 வெற்றியின் வடிவம்...
👉 சாதனையின் வடிவம்...
👉 மன உறுதியின் வடிவம்...
👉 வீரத்தின் வடிவம்...
👉 சக்தியின் வடிவம்...
👉 நம்பிக்கையின் வடிவம்...
👉 தேடலின் வடிவம்...
-----------------------------------------
விடுகதைகள்...!!
-----------------------------------------
1. பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது. அது என்ன?
விடை : தேங்காய்.
2. தேவை என்றால் வீசுவார்கள், தேவையில்லை என்றால் எடுத்து வைப்பார்கள். அது என்ன?
விடை : நங்கூரம்.
3. ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள். அது
என்ன?
விடை : கத்தரிக்கோல்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக