Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கை உயர்வு - தமிழகத்திற்கு என்ன இடம்?

Internet access comes with a cost in emerging economies | The Networkஇந்தியாவின் இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக ட்ராய் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் இண்டர்நெட் பயனர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாத இறுதியில் 74.3 கோடியை தாண்டியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்களில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மட்டும் 52.3% பங்கு இருக்கிறது. அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனத்துக்கு 23.6% பங்கு இருக்கிறது. மூன்றாவது இடத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு 18.7% பங்கு இருக்கிறது.

ட்ராய் அறிக்கையில், “கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியவின் இண்டர்நெட் பயனர்களின் எண்ணிக்கை 71.7 கோடியில் இருந்து 74.3 கோடியாக உயர்ந்துள்ளது. இது 3.40 விழுக்காடு வளர்ச்சியாகும்” என்று தெரிவித்துள்ளது.

இதில் வயர்லெஸ் இண்டர்நெட் பயனர்களின் எண்ணிக்கை 72 கோடியாக இருக்கிறது. அதாவது, ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்களில் வயர்லெஸ் பயன்படுத்துவோர் 97% இருக்கின்றனர். வயர்லெஸ் இண்டர்நெட் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் 3.51% வளர்ச்சியை தொட்டுள்ளது.

ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்களில் 96.90 விழுக்காட்டினர் மொபைல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாகவே வெறும் 3.02 விழுக்காட்டினர் மட்டுமே வயர் வாயிலான இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

அதிக இண்டர்நெட் பயனர்களை கொண்ட வட்டாரங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா 6.3 கோடி பயனர்களுடன் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஆந்திரம் மற்றும் தெலங்கானா 5.8 கோடி பயனர்களை கொண்டிருக்கிறது. மூன்றாம் இடத்தில் கிழக்கு உத்தரப் பிரதேசம் 5.4 கோடி பயனர்களை கொண்டிருக்கிறது. நான்காம் இடத்தில் தமிழகம் 5.16 கோடி பயனர்களை கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக