Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

Instagram Reels-ல் புதிய அம்சம் அறிமுகம்... இனி 30 விநாடி வரை வீடியோ பதிவு செயலாம்!

Instagram Reels-ல் புதிய அம்சம் அறிமுகம்... இனி 30 விநாடி வரை வீடியோ பதிவு செயலாம்!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) என்பது டிக்டாக்கிற்கு (TikTok) போட்டியாக துவங்கபட்ட குறுகிய வீடியோ அம்ச பகிர்வு ஆகும். இது இப்போது பயனர்களை 30 விநாடி வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கும் என்று சமூக ஊடக தளம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. முன்னதாக பயனர்கள் 15 விநாடிகள் வரை மட்டுமே வீடியோவைப் பதிவு செய்ய முடியும். மேலும், இன்ஸ்டாகிராமிலும் வேறு சில அம்சங்கள் கிடைக்கின்றன. இப்போது, ​​பயனர்கள் ஒரு வீடியோவைப் பதிவுசெய்யும்போது டைமரை 10 வினாடிகள் (short video) வரை நீட்டிக்க முடியும், மேலும் ஒரு வீடியோவைப் பதிவுசெய்த பிறகு அதை நீக்கவும் முடியும்.

இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராமின் சமீபத்திய புதுப்பிப்பில் பயனர்களுக்கு மிக விரைவில் கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி, 50 நாடுகளில் ரீல்ஸ் கிடைக்கிறது. அங்கு பயனர்கள் வரவிருக்கும் புதிய அம்சங்களை அனுபவிக்க முடியும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் இயக்குனர் டெஸ்ஸா லியோன்ஸ்-லாயிங் ஒரு அறிக்கையில், பயனர்களிடமிருந்து ஏராளமான பொழுதுபோக்கு, ஆக்கபூர்வமான உள்ளடக்கங்களைக் கண்டிருப்பதால், பயனர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அம்சத்தை மேம்படுத்துகிறோம் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குறுகிய வீடியோக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் பயனர்கள் இப்போது 15 விநாடி வீடியோக்களை பதிவு செய்யலாம். அவர்கள் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் ரீல்களை ஒரு பிரத்யேக பிரிவில் சேமிக்கவும் முடியும். மக்கள் கூட ரீல்ஸ் 

இன்ஸ்டாகிராம் அதன் அம்சங்களை மக்கள் பயன்படுத்த எளிதாக்குகிறது. இந்தியாவில் டிக்டாக் தடைக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மிகவும் பிரபலமாகிவிட்டது. இது டிக்டாக் போன்ற கிட்டத்தட்ட ஒத்த அம்சங்களை வழங்குகிறது. அனைத்து வகையான வேடிக்கையான ஆடியோ, AR விளைவுகள் போன்ற எடிட்டிங் கருவிகளை ரீல்ஸ் வழங்குகிறது. சமூக ஊடக தளம் வரும் நாட்களில் கூடுதல் அம்சங்களையும் அறிமுகப்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக